dimanche 9 novembre 2014

ஊடகங்களின் தவறே பிரபாகரன் மரணத்திற்கு முக்கிய‌ காரணம்;ஆனந்தசங்கரி

ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு ஊடகங்கள் தமது செய்தியை கொண்டு சேர்க்க தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் காரணமாக பாரியளவில் உயிர்ச் சேதங்கள் எற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்கள் தமது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்திருந்தால் பிரபாகரன் சில வேளைகளில் வடக்கின் முதலமைச்சராக கடமையாற்றியிருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

துரதிஸ்டவசமாக தமது செய்தி சென்று சேரவில்லை எனவும், பிழையான தகவல்களே வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாh.

தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகளின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

எங்கு செல்கின்றோம் என்று தெரியாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சி மக்களை பிழையாக வழிநடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire