dimanche 30 novembre 2014

மத மூடர்கள் விழாவில் 5 ஆயிரம் எருமை மாடுகள் பலி

நேபாள நாட்டில் பாரா மாவட்டம், பரியார்புர் கிராமத்தில் காதிமய் என்ற  மத அம்மன் கோவில் உள்ளது. இந்த மத கோவில் விழா 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் நேபாள பக்த மூடர்கள் மட்டுமின்றி, இந்தியாவில் இருந்தும் பல ஆயிரக்கணக்கானவர்கள் கூடுவார்கள். விழாவில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் மற்றும் பறவைகளை பலி கொடுப்பது வழக்கம்.

அதன்படி கடந்த 2 நாட்களாக அங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எருமை மாடுகள் பலி கொடுக்கப்பட்டன. அதோடு ஆயிரக்கணக்கான ஆடுகள், பன்றிகள், கோழிகளும் பலி கொடுக்கப்பட்டன. இந்த பலிக்கு இந்திய பகுதியில் இருந்தும் எருமைகள், ஆடுகள் கொண்டு செல்லப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் இதற்கு சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தடை விதித்தது. இந்த விழாவுக்கு பத்திரிகையாளர்கள், புகைப்பட நிபுணர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தான் உலகிலேயே மிகப்பெரிய பலி கொடுக்கும் விழா என்று கருதப்படுகிறது. விழா அமைப்பாளர்கள் இது பாரம்பரியமாகவும், முன்னோர்கள் வழக்கப்படியும் நடைபெறுகிறது. இந்த பலி அம்மனை சாந்தப்படுத்துவதாக நம்புவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் மிருகவதை தடுப்பு சங்கத்தினர் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த விழாவுக்கு பீகாரில் இருந்து சென்ற ஒரு பெண் நெரிசலில் சிக்கியும், ஒரு வயது குழந்தை ஒன்று குளிர் தாங்காமலும் இறந்தனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire