vendredi 21 novembre 2014

தேர்தல் பிரகடனத்தில் மஹிந்த கையொப்பம்

தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையாளரைக் கோரும் உத்தியோகபூர்வ பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கையொப்பமிட்டுள்ளார். நேற்று நண்பகல்  இதற்கான கையொப்பத்தையிட்ட அவர், தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த உத்தியோகபூர்வ பிரகடனம் நேற்று நண்பகல் 1.30 அளவில் தேர்தல் திணைக்களத்திற்கு கிடைத்ததாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இதன்படி இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 31 ம் உறுப்புரையின் (3அ) உப உறுப்புரைக்கமைய “மேலும் ஒரு தவணைக்கு பதவி வகிப்பதற்காகத் தேர்தல் மூலம் ஆணையொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக மக்களிடம் வேண்டி நிற்பதற்கான தனது விருப்பத்தை” ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரகடனப்படுத்தியுள்ளார். ஆதலால் 1988ம் ஆண்டின் 16ம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தினால் திருத்தியமைக்கப்பட்ட 1981 ம் ஆண்டின் 15ம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் 2 ம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாகச் செயற்பட்டு, அப்பிரிவில் விதிக்கப்பட்டுள்ளவாறு, பெயர், குறித்த நியமனம் கையேற்கப்படும் திகதி, இடம் என்பவற்றையும் தேர்தல் தினத்தையும் அதிவிசேட வர்த்தமானியொன்றினூடாக துரிதமாக அறிவிக்க இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire