mardi 11 novembre 2014

ஐஸ்கிறீம், பழச்சாறு” நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்?

juiceயாழ். மாவட்டத்தில் ஜஸ்கிறீம் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரத்தின் பின்புலத்தில் வேறு நோக்கங்கள் உள்ளதாக அரசியல்வாதிகளும், சிவில் சமூகத்தினரும் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள 59 ஐஸ்கிறீம் மற்றும் பழச்சாறு விற்பனை நிலையங்களின் வியாபார நடவடிக்கைகளுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யப்படுகின்ற ஐஸ்கிறீம் மற்றும் பழச்சாறு என்பன நுகர்வுக்கு உகந்ததாக இல்லையெனத் தெரிவித்தே இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, வர்த்தகதர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் மக்களின் சுகாதார நலன்கருதியே இவ்வாறு சில ஐஸ்கிறீம் மற்றும் பழச்சாறு விற்பனை நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.
எனினும் இது குறித்து தமக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லையென யாழ். மாவட்ட உப உணவு மற்றும் குளிரூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
இதேவேளை ஜஸ்கிறீம் விற்பனை நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்ட விடயத்தின் பின்புலத்தில் வேறு நோக்கங்கள் இருப்பதாக பல தரப்பினரும் குற்றம் சுமத்துகின்றனர்.
எவ்வாறாயினும் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வினை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, யாழ்.குடாநாட்டில் நாளாந்தம் 30 பேர் வயிற்றோட்டத்தினால் பாதிக்கப்படடுவதாக, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்று இன்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire