mercredi 26 novembre 2014

மகேந்தாவுக்கு பிரச்சாரம்;வைகோ

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்ததற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின்போது, பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்த ராஜபக்சேவை சந்தித்தது கவலைக்கொடுப்பதாகவும், ராஜபக்சேவுடனான சந்திப்பு தமிழகர்களின் மனதை புண்படுத்துவதாகவும் உள்ளது. 

வருகிற தேர்தலிலும் நீங்களே ஜெயித்து ஜனாதிபதியாக வரவேண்டும் என்று வாழ்த்து சொல்லியிருக்கிறார் நரேந்திர மோடி. பதவிப் பிரமாணத்திற்கு அழைத்தபோதே நான் எனது மனதிலே உள்ளதை கொட்டினேன். வாஜ்பாய் அணுகுமுறை ஒன்றுக்கூட இல்லையே. எங்கள் தலையில் கல்லைப்போடுகிறதுபோல் பேசுகிறார். இதையெல்லாம் சகிக்க முடியாது என்றார். 

Aucun commentaire:

Enregistrer un commentaire