dimanche 21 décembre 2014

ராஜபக்ஸ சிறிசேனா நிலைப்பாடு வித்தியாசமானது ;என். சத்தியமூர்த்தி (1)

இங்கு இப்போது ஜனாதிபதி தேர்தல் சமயம், இரண்டு பிரதான போட்டியாளர்களுமே 25 விகிதமான சிறுபான்மையினரின் வாக்குகளைப் பொறுத்த வரை ஒரு மறுப்பு முறையிலேயே இருப்பது போலத் தோன்றுகிறது, இன்னமும் அவர்களது பெரும்பான்மை சிங்கள பௌத்த சகோதரர்கள் பார்க்காதபடி அதே விடயத்தை கேட்டு தனது பிரத்தியேக வழிக்கு அவர்கள் வரவேண்டும் என்று விரும்புவதாகவோ அல்லது அந்த நோக்கத்தை அடைவதற்கான சுலபமான வழிகளை தேடுவதாகவோ உள்ளனர்.
அவர்கள் இருவருக்கும் இடையில் மகிந்த ராஜபக்ஸ அவற்றை அடைவதற்கான வாய்ப்பை பெறுவதில் சிறிதளவு மேல் நிலையில் உள்ளார், ஆனால் தேர்தல் நாள் வருவதற்கிடையில் அவர் அவர்களது வாக்குகள் அனைத்தையும் பெற்றுவிடுவார் என்று கருத முடியாது. மாறாக ஆவேசமாக ஆதரவு காட்டும் ஸ்ரீலங்கா தமிழ் சமூகம் 2010ல் இருந்தது போல அவருக்கு எதிராக உள்ளதாகத் தோன்றுகிறது. இருந்தாலும் அவர்களது வாக்குகளில் ஒரு சிறிய பகுதியும் மற்றும் கணிசமான அளவில் வாக்களிக்காமல் உள்ளவர்களது பங்கும் அவருக்கு கிடைக்க விருக்கும் தந்திரோபாயமும் மற்றும் மூலோபாயமானதுமான ஒரு வெற்றியாகும். தேர்தல் வாக்குறுதிகளை வழங்காமல் அவரால் அதைவிட அதிகம் கேட்டிருக்க முடியாது.
பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவின் விடயத்தில் அவரது நிலைப்பாடு வித்தியாசமானது. அவரது தெரிவு 2010 மற்றும் 2005 ல் ஜனாதிபதி ராஜபக்ஸவை சென்றடைந்திருந்த சிங்கள பௌத்த தேசியவாதிகளின் வாக்குகளின் ஒரு பகுதியை துண்டாட நினைக்கும் அவரது செயல்நோக்கம் கொண்ட திறமையின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. மறைமுகமாக இது வெளிப்படுத்தும் உண்மை என்னவென்றால் சிறிசேனவின் முகாமில் உள்ளவர்களில் அவர் உட்பட சந்திரிகா பண்டாரநாயக்காவோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவோ போருக்குப் பிந்தைய சமகால ஸ்ரீலங்காவுக்கு பொருத்தமான தேசிய இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு என்னும் உணர்வுகளுக்காக தமிழர்களையும் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் விட்டுக் கொடுத்துவிட்டது போலத் தெரிகிறது.
ஊடகத் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நடத்திய ஒரு சந்திப்பில் சிறிசேன தான் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ள கட்சிகளைத் தவிர ரி.என்.ஏ உடனோ அல்லது வேறு கட்சிகளுடனோ அவர் எந்த உடன்படிக்கையும் மேற்கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். மேலும் அவர் ஐ.தே.க மற்றும் ஜாதிக ஹெல உருமய என்பனவற்றுடன் வேறுவேறான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவில்லை என்றும் ஒரே ஒரு ஒப்பந்தமே உள்ளது என்றும் ஏனையவை எந்த அர்த்தம் கொண்டிருந்தாலும் அவை அவற்றில் இருந்து பெறப்பட்டவையே என்றும் அவர் அப்போது தெளிவு படுத்தினார்.
பொதுபலசேனா மற்றும் முஸ்லிம்கள்
ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு அடுத்ததாக முஸ்லிம்கள் வருகிறார்கள். சமூக ரீதியில் சக்தி மிக்கதாகவும் மற்றும் பொருளாதார ரீதியில் மேல்நோக்கி முன்னேறிவரும் முஸ்லிம்கள் தங்களை பிரதிநிதிப் படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளிலும் இடம்பிடித்துள்ளார்கள், பொதுபலசேனா இவர்கள்மீது நடத்தும் தாக்குதல்களுக்கு முடிவு இல்லை. அந்தக் கட்சிகள் அனைத்தும் ஜனாதிபதி ராஜபக்ஸவின் அரசாங்கத்தில் அங்கத்தவர்களாக உள்ளதுடன் அதற்குள்ளிருந்து கர்ஜனைகளையும் எதிர்கொள்ளுகின்றன. கேள்வி என்னவென்றால் முஸ்லிம் கட்சிகள் குறிப்பாக எண்ணிக்கையில் வலுவாக உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இந்த தேர்தலில் ஜனாதிபதி ராஜபக்ஸவுடன் ஒட்டிக் கொண்டிருக்குமா அல்லது எதிரணிக்குத் தாவுமா அல்லது நடுநிலை வகிக்குமா அல்லது வாக்களிக்காது இருக்கும்படியோ அல்லது தேர்தலை புறக்கணிப்பு செய்யும்படி அழைப்பு விடுக்குமா என்பதுதான். ரி.என்.ஏ மற்றும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் பெரும்பான்மையான தமிழ் மக்களைப் போலில்லாமல் ஸ்ரீ.ல.மு.கா மற்றும் ஏனைய முஸ்லிம் அரசியல் அமைப்புகள் கடைசி இரண்டு தெரிவுகளான நடுநிலை வகிப்பது அல்லது வாக்களிக்காது இருத்தல் மற்றும் புறக்கணித்தல் என்பதை உண்மையில் தெரிவு செய்யாது.
ஒன்றில் ஸ்ரீ.ல.மு.கா ஜனாதிபதி ராஜபக்ஸவுடன் அல்லது வேட்பாளர் சிறிசேனவுடன் இருக்கும். இதில் நாட்டிலுள்ள ஸ்ரீலங்கா தமிழர்கள் அல்லாத சிறுபான்மையினரின் உள்ளார்ந்த பண்பும் வெளிப்படுகிறது. இதன்படி முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் இடையே அடையாளம் காணப்பட்ட கட்சிகள், அதாவது ஏற்றுக் கொள்ளப்பட்ட இனச் சிறுபான்மையினர் இடையே உள்ள மூன்றாவது தரப்பு தனிப்பட்ட தேர்தல் நுண்கலையில் வெற்றிபெறும் சிங்களவருடன் கூட்டு வைத்துள்ளார்கள்.
எதிர்பார்ப்பு மற்றும் அத்தகைய ஒரு ஏற்பாட்டினால் உண்டாகும் விளைவுதான் நாட்டிலுள்ள சிறுபான்மையினர் பெரும்பான்மை சமூகத்தினருடன் சேர்ந்து வாழவேண்டும் என்கிற உண்மையான அரசியல் நடவடிக்கை. மாறாக முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் தங்கள் சூழ்நிலையின் யதார்த்தத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு தங்கள் தேர்தல்; தொடர்பான பிரசன்னத்தை தங்கள் சமூகத்தின் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால நலன்களுக்கு பயன்படுத்துவது அல்லது அவர்களது பூர்த்தியாகாத நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகள்  பற்றி காலத்துக்கு காலம் அழுத்தம் கொடுப்பது போன்றவற்றைச் செய்து வருகின்றன.
மலையகத் தமிழர்கள் நிலை என்ன?
எப்போதையும் போல இந்த முறையும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னராகவே மலையகத் தமிழ் குழுக்களை வேட்டையாடுவது ஆரம்பமாகிவிட்டது. எல்லாக் குழுக்களும் இல்லாவிட்டாலும் அநேகமானவை இதுவரை ஆட்சியிலுள்ள அரசாங்கத்துடன் இணைந்துதான் உள்ளன, ஆனால் அதில் ஏற்கனவே விரிசல்கள் தோன்றியுள்ளதாக எதிர்பார்க்கப் படுகிறது. வௌ;வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதி அமைச்சர்கள் பி.திகாம்பரம் மற்றும் வி.எஸ்.இராதாகிருஸ்ணன் ஆகியோர் ஜனாதிபதி ராஜபக்ஸவின் அரசாங்கத்திலிருந்து வெளியேறி சிறிசேனவிடம் சென்றிருப்பது பற்றிய விபரங்களில் ஒருவேளை குறைபாடு இருக்கலாம் ஆனால் மலையகத் தமிழர்களின் அரசியலில் இது ஒன்றும் எதிர்பாராத நிகழ்ச்சி இல்லை.
மலையகத் தமிழ் கட்சிகளினால் செயற்படுத்தப்படும் நடவடிக்கைகளில்  அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமை இன்னமும் ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) கட்சியிடமே உள்ளது. 2005ம் ஆண்டு ஜனாதிபதி தோதலில் இ.தொ.கா எதிர்க்கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்காவை ஆதரித்தது. அன்றைய தேர்தல் முடிவுகள் வெற்றி பெற்ற வேட்பாளரான ராஜபக்ஸ நுவரெலியா மாவட்டத்தில் தோல்வியடைந்ததைக் காட்டின. ராஜபக்ஸவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிசேனவின் முகாமுக்கு தாவியுள்ளதை அடுத்து ராஜபக்ஸவின் குழு வரும் நாட்கள் மற்றும் வாரங்களில் தொண்டா மற்றும் இ.தொ.காவிடம் இருந்து வரப்போகும் சமிக்ஞையை பார்த்துக் கொண்டிருக்கிறது. எனினும் அதற்கு மாறாக இப்போது எந்த சமிக்ஞையும் வருவதாகத் தெரியவில்லை.
(தொடரும்)

Aucun commentaire:

Enregistrer un commentaire