dimanche 7 décembre 2014

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடீன் 10ஆம் தேதி இந்தியா வருகிறார்.

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடீன், டிசம்பர் 10ஆம் தேதி இந்தியா வருகிறார்.
 இந்தப் பயணத்தின் போது அவர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார்.
 அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 நீண்டகாலமாக ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் நெருக்கமான உறவு இருந்து வருகின்றது. இந்நிலையில் புடீனின் வருகை இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire