mardi 2 décembre 2014

புனர்வாழ்வளிக்கப்பட்ட 12,030 முன்னாள் தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்களுக்கு தொழில் வாய்ப்பு

புனர்வாழ்வளிக்கப்பட்ட 12,030 முன்னாள் தமிழீழ விடுதலை புலி   உறுப்பினர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் துறைகளில் இவர்களை தொழிலுக்கு அமர்த்துவதற்கு நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கமைய, சிவில் பாதுகாப்பு பிரிவிற்கு 666 பேரும், ஆசிரியர் சேவைக்கு 61 பேரும் மேலும் அரச சேவையின் ஏனைய பதவிகளுக்கு 255 பேரும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதைதவிர, வெளிநாட்டு வேலைவாப்புக்கு 502 பேர் உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 77 பேர் மேலதிக கல்வி நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயிகள், சாரதிகள், வர்த்தகர்கள், மின் இணைப்பாளர்கள், வாகன திருத்துனர்கள், மீனவர்கள் என பலதரப்பட்டவர்கள் புனவாழ்வளிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire