dimanche 14 décembre 2014

நீதிபதிகள் மனிதநேய தீர்ப்பு

கருநாடகாவில் ஒரு கோயிலில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் உருளும் மூடநம் பிக்கையை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது 
கர்நாடகத்தில் சில கோயில்களில் நடைபெறும் அருவருக்கத்தக்க திருவிழா ஒன்றைத் தடை செய்து உச்சநீதிமன்றத்தின் மாண்பமை நீதிபதிகள் ஜஸ்டீஸ் திரு. மதன்லோக்கூர், ஜஸ்டீஸ் பானுமதி ஆகியோர் தந்துள்ள தீர்ப்புதான் உண்மையில் அரசியல் சட்ட கடமைகளில் ஒன்றான அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் மூடநம்பிக்கை ஒழிப்பு, சீர்திருத்தம், மனிதநேயம், வளர்ப்பு இவைகளை நடைமுறைப்படுத்தும் நல்லதோர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பு ஆகும்!
பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளில் உருளும் கேவலம்!
பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளை வரிசையாக போட்டு அதன்மீது பக்தர்கள் உருண்டு புரண்டு செல்லும் அநாகரிக காட்டுமிராண்டித்தனம், பக்திப் போர்வையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வந்தது!
மூடத்தனத்தின் முடைநாற்றம் அல்லவா இது?
கடந்த 500 ஆண்டுகளாக உருளுசேவா என்ற பெயரில், தட்சண கர்நாடகா மாவட்டத்தின் சுல்லியா தாலுக்காவில் உள்ள குக்கு சுப்ரமணியசுவாமி கோயிலில், பார்ப்பனர்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைகள்மீது மற்றவர்கள் உருண்டு புரண்டு வரும் நிகழ்ச்சி என்பது பொது ஒழுக்கம் அமைதி, சுகாதாரம் இவற்றிற்கு எதிரானது அருவருப்பானது என்பதால் இதனை கர்நாடக அரசு தடை செய்தது.
வியாதிகள் நீங்குமாம்!
தங்களுக்குள்ள வியாதிகள் எல்லாம் இந்த எச்சில் இலைகள்மீது புரண்டால் தானே குணமாகி விடும் என்ற பக்தி மூடநம்பிக்கை காரணமாக இப்படிச் செய்து வரும் திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் ஜாத்ரா (விழா)வாக அக்கோயில் கொண்டாடும் வழக்கம்.
இதனை கர்நாடக நீதிமன்றம் நெடுங்கால பழக்க வழக்கம் என்ற பெயரால் நீடித்து வந்த நெடுங்கால விழாவிற்கு அரசின் தடையை ரத்து செய்தது.
அதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு - அப்பீல் செய்தது  அதன்மீது தான் உச்சநீதிமன்றம் கர்நாடக நீதிமன்ற தீர்ப்புக்குத் தடை வழங்கியது. இது மாதிரி கர்நாட கத்தில் மூன்று கோயில்களில் எச்சில் இலைமீது உருளும் திருவிழா நடைபெறுகிறது; இது 500ஆண்டு கால பழைய பழக்க வழக்கம். எனவே இதனை நிறுத்தக் கூடாது என்று இக் கோயில்கள் சார்பாக வழக்குரை ஞர்கள் வாதித்தனர்.
உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்வி
அதற்கு உச்சநீதிமன்றம் நன்றாக ஒரு கேள்வியைக் கேட்டது. தீண் டாமைக் கொடுமைகூட பல நூறு ஆண்டுகளாக உள்ளது என்பதற்காக அதைத் தடை செய்யாமல் இருக்க முடியுமா? டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெளிவாக தீர்ப்பளித்துள்ளது.
இது மிகவும் பாராட்டத்தகுந்த முற்போக்குக் கருத்துள்ள, மனிதநேயத் தீர்ப்பாகும். நீதிபதிகளை மனதாரப் பாராட்டுகிறோம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire