vendredi 19 décembre 2014

விடுதலை புலிகளின் பெயரில் நிதி திரட்டியவர்கள் 10 பேருக்கு சிறை

விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பத்துப் பேருக்கு ஜேர்மனியின் பெர்லின்  குற்றவியல் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பெர்லின் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, இரு பெண்கள் உள்ளிட்ட பத்து இலங்கைத் தமிழர்களுக்கு, ஆறு தொடக்கம் 22 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கணபதிப்பிள்ளை கோணேஸ்வரன் என்பவருக்கு 15 மாதங்களும், சுமதி உதயகுமார் என்பவருக்கு, 7 மாதங்களும், கோபாலபிள்ளை ஜெயசங்கர் என்பவருக்கு 8 மாதங்களும், பாலச்சந்திரன் பாலசுப்பிரமணியன் என்பவருக்கு 22 மாதங்களும், குமணன் தர்மலிங்கம் என்பவருக்கு 6 மாதங்களும், வைத்திலிங்கம் ஜோதிலிங்கம் என்பவருக்கு 1 ஆண்டும்,  யோகராஜா சிறீஸ்கந்தராஜா என்பவருக்கு 1 ஆண்டும், செந்தில்குமரன் கந்தசாமி என்பவருக்கு 1 ஆண்டும், துஸ்யந்தி அருணாசலம் என்பவருக்கு 9 மாதங்களும், தயாபரன் ஆறுமுகம் என்பவருக்கு 1 ஆண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.தண்டனை விதிக்கப்பட்டுள்ள இவர்கள், 32 வயதுக்கும், 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர். இவர்களில் ஐவர் ஜேர்மனியில் குடியுரிமை பெற்றவர்கள்.
இவர்கள் 2007ம் ஆண்டு தொடக்கம், 2009ம் ஆண்டு வரை விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக, ஒரு இலட்சம் யூரோவைத் திரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இந்த தண்டனை இரண்டு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையாகவே இருக்கும் என்றும், இதற்கு எதிராக, ஒரு வார காலத்துக்குள் சமஸ்டி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும் என்றும் பெர்லின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. செப்ரெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், அறிமுகப்படுத்தப்பட்ட வெளிநாட்டு குற்றவியல் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுவதைத் தடுக்கின்ற சட்டத்தின் கீழேயே இவர்களுக்கான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire