நிலம் புயலில் சிக்கிய வியட்னாமுக்குச் சொந்தமான சரக்குக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்பில் நேற்று மூழ்கி விபத்துக்குள்ளாகியது. இதில் 22 பேர் பயணித்த நிலையில் கப்பலின் கப்டன் உள்ளிட்ட 4 மாலுமிகள் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மியன்மாரில் இருந்து இந்தியாவுக்கு 6500 தொன் மரம் ஏற்றிச் சென்ற சாய்கோன் குயின் என்ற சரக்குக் கப்பலே இலங்கை கடற்பரப்பில் மூழ்கியுள்ளது.
அதிகாலை 12.15 மணியளவில் இலங்கை கடற்பரப்பில் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஆபத்தில் சிக்கியுள்ளதாக இந்தக் கப்பலில் இருந்து உதவி கோரி அழைப்பு விடுக்கப்பட்டது. நிலம் புயலில் சிக்கியதால் இந்தக் கப்பலுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கை அமெரிக்க கடலோரக் காவல் படை மற்றும் கப்பல்களின் உதவியுடன் தேடுதல் நடத்தப்பட்டது.
Aucun commentaire:
Enregistrer un commentaire