dimanche 23 décembre 2012

வவுனியாவில் அடை மழை; 637 பேர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறீ உள்ளனர்

தாண்டிக்குளம், திருநாவற்குளம், சமணங்குளம், கோமரசங்குளம், கந்தசாமி நகர், குடியிருப்பு, புதுக்குளம், பூந்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளதுடன் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி  மக்களும் வெளியேறி வருகின்றனர்.அதன்படி பாவற்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அதன் 6 அவசர வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால் பூவரசங்குளம் ஊடன செட்டிகுளம் வீதியே இனம்காண முடியாமல் வெள்ளம் நிரம்பி  வழிந்தோடுகின்றது.குறித்த வீதிக்கு அருகே உள்ள கந்தசாமி நகர், வீடியா நகர் ஆகிய கிராமங்கள் முழுமையாக வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதால் வெளியிடத் தொடர்புகள் அற்ற நிலையில் காணப்படுகின்றது. அதனால் அங்குள்ள 39 குடும்பங்களையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 167 குடும்பங்களை சேர்ந்த 637 பேர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.இவர்கள் 7 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான நிவாரண உதவிகள் பிரதேச செயலகத்தினூடாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 


Aucun commentaire:

Enregistrer un commentaire