lundi 24 décembre 2012

தமிழ் பெண் இராணுவ சிப்பாய்கள் தமது முதலாவது சம்பளத்தை இன்று பெற்றுக் கொண்டனர்


அண்மையில் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் பெண் இராணுவ சிப்பாய்கள் தமது முதலாவது சம்பளத்தை இன்று பெற்றுக் கொண்டனர் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேரியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்திலிருந்து அண்மையில் இராணுவ பெண்கள் பிரிவிற்கு 102 தமிழ் யுவதிகள் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்ட பெண் இராணுவ சிப்பாய்கள் தமது அடிப்படை வேதனமாக 30 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை பெற்றுக் கொண்டனர்.
சம்பள நிலுவை உரிய வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டு, அவற்றுக்கான வங்கிப் புத்தகங்களை கிளிநொச்சி இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் உதய பெரேரா தமிழ் பெண்கள் இராணுவ சிப்பாய்களுக்கு வழங்கி வைத்தார்.
வடக்கில் இடம்பெறும் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இந்த பெண் இராணுவ சிப்பாய்கள் தற்சமயம் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Aucun commentaire:

Enregistrer un commentaire