mercredi 26 décembre 2012

சிறிலங்கா அரசாங்கம் திட்டம் அரசியலமைப்பில் திருத்தம் செய்ய

நாட்டின் அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்வதற்கு எழுத்து மூலமான யோசனைகளைச் சமர்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகளிடம் கோருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

   உத்தேச அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக எழுத்துமூலமான யோசனைகளை கவனத்தில் எடுத்துக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

   தற்போது, சிறிலங்காவில் நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம், நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையிலான அதிகாரச் சமநிலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும் 13வது திருத்தம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே, அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்ய சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

   நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ள நிலையிலேயே அதைச் செய்வது பொருத்தம் என்றும் சிறிலங்கா அரசாங்கம் கருதுவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Aucun commentaire:

Enregistrer un commentaire