samedi 29 décembre 2012

நெடியவன் குழுவினர் TNA யின் தலைவராக்க முயற்சி என்கிறது சிங்கள இணையம்:-

இலங்கைப் பாதுகாப்பு தரப்பும் புலனாய்வுப் பிரிவும்  சிறீதரனுக்கும் வலை வீச்சு - சிக்குவாரா?

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாக கூறி பிரசாரம் செய்து, போரின் மூலமே இலங்கையின் தனிநாட்டை உருவாக்கலாம் என சர்வதேச ரீதியில் கொள்கைளை பரப்பி வரும், நெடியவன் குழுவினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து, இரா. சம்பந்தனை நீக்கி விட்டு, சிறிதரனை தலைவராக நியமிக்க வேண்டும் என கூறியுள்ளதாக அரச சார்பு சிங்கள இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் இரா. சம்பந்தன் ஆற்றிய உரையை அடுத்த நெடியவன் அணியினர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் எனவும், ஐரோப்பாவில் இருந்து இயங்கும் தமிழர்களின் சர்வதேச மனிதாபிமான அமைப்பின் ஊடாக அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சம்பந்தன், புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு கோபத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளதாகவும்  அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்தும் உத்தரவை புலிகளின் தலைவர் பிறப்பித்து உள்ளதாகவும்  புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் நியமிக்கப்பட வேண்டும் எனவும் தலைவர் உத்தரவிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire