mercredi 19 décembre 2012

அயர்லாந்தில் கருக்கலைப்பை சட்டபூர்மவாக்க நடவடிக்கை


கருக்கலைப்பு செய்யப்படாததால் உயிரிழந்த சவிதா ஹாலப்பனவர்    தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கண்டறியப்பட்டால், அச்சூழலில் கருக்கலைப்பை அனுமதிக்க அங்கு சட்டம் கொண்டுவரப்படுகிறது.
கருக்கலைப்புக்கு குறித்த விஷயத்துக்கு சட்ட ரீதியாக ஒரு தெளிவைக் கொண்டுவர அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கையை அடுத்தே அரசின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த பல் மருத்துவர் சவிதா ஹாலப்பனவர் அங்கு கருக்கலைப்பு மறுக்கப்பட்டதால் மரணமடைந்து ஏழு வாரங்கள் ஆன பிறகு இந்தச் சட்டம் அங்கு கொண்டுவரப்படுகிறது.

தற்போது அயர்லாந்தில் கருக்கலைப்பு சட்ட விரோதமான ஒன்றாக உள்ளது. தாயின் உயிருக்கு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு ஆபத்து உள்ளது என்று கருதப்பட்டால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும் சூழல் இருக்கிறது.
எனினும் இதுவரை மருத்துவர்கள் எத்தகைய சூழலில் உறுதியாக கருக்கலைப்பைச் செய்யலாம் என்பது குறித்து அரசு எந்தச் சட்டத்தையும் இயற்றவில்லை.
மனித உரிமைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தை கடைபிடிக்கும் வகையில், அயர்லாந்து அரசின் நடவடிக்கை அமைகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire