mardi 25 décembre 2012

தூக்குதண்டனை:கற்பழிப்பு குற்றத்திற்கு: கமல் எதிர்ப்பு

டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்று மாணவ, மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் தலைநகர் டெல்லி ஸ்தம்பித்து உள்ளது.
நடிகர், நடிகைகள் பலர் மாணவி கற்பழிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர்.
நடிகர் கமலஹாசனும் இதை கண்டித்து உள்ளார்.
'விஸ்வரூபம்' படத்தை விளம்பர படுத்துவதற்காக நடிகை பூஜாகுமாருடன் கொச்சி சென்ற அவரிடம், மாணவி கற்பழிக்கப்பட்டது குறித்தும் குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்று மாணவ, மாணவிகள் வற்புறுத்துவது குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து அவர் கூறுகையில், டெல்லியில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.
ஒரு குற்றத்தை ஈடுகட்ட இன்னொரு குற்றத்தை கையாள்வது என்பது சரியான நடைமுறை அல்ல. கொடூரமான தண்டனை கூட சட்ட ரீதியாக ஒரு கொலைக்கு சமமானதுதான்.
பாலியல் பலாத்காரம் நடந்த பஸ் என்னுடையது. அச்சம்பவம் நடைபெற்ற தலைநகரமும் என்னுடையதுதான். பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண் எனது சகோதரி.
இந்த செயலில் ஈடுபட்டவனும் என் சகோதரன்தான் என்றும் இதற்காக நான் அவமானப்படுகிறேன் எனவும் கூறியுள்ளார்.
மேலும், கமல் ஏற்கனவே தூக்குதண்டனைக்கு எதிராக விருமாண்டி படத்தை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire