jeudi 13 décembre 2012

வழிமாறிய வாகன ஓட்டிகள் அப்பிள் வரைபடத்தால்

அவுஸ்திரேலியாவில் அப்பிள் வரைபட வழிகாட்டியை உபயோகித்த வாகன ஓட்டிகள், பாம்புகள் ஓடும் பயங்கர பாலைவனத்திற்கு வழிமாறி சென்றுவிட்டனர். இதையடுத்து அவுஸ் திரேலியா பொலிஸார் அப்பிள் ஐபோன் வரைபட மென் பொருளை பயணிகள் பயன்படுத்தக் கூடாது என எச்சரித்துள்ளனர். இதுவரை பல வாகன ஓட்டிகளை அவர்கள், முர்ரே சன்செட் தேசிய பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பாலைவனத்திலிருந்தும் மீட்டுள்ளனர். வாகன ஓட்டிகள் சுமார் 24 மணி நேரத்துக்கும் மேலாக தண்ணீர் மற்றும் உணவில்லாமல் தவித்துள்ளனர். மேலும் பாம்பு, நரி போன்ற பயங்கர விளங்குகளையும் கண்டுள்ளனர். வாகன ஓட்டிகளின் இந்த சிரமத்தை அடுத்து தவறான வழிகளை காட்டும் அப்பிள் ஐபோன் வரைபட மென் பொருளை உபயோகிக்க வேண்டாம் என அவுஸ்திரேலிய பொலிஸார் எச்சரித்துள்ளனர்

Aucun commentaire:

Enregistrer un commentaire