samedi 29 décembre 2012

ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி,மரணம்! அமைதியாக அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள்!





டில்லியில் ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி, சிங்கப்பூரில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவிக்கு மூளைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவர் இந்திய நேரப்படி நள்ளிரவு 2.15 மணிக்கு மாணவி உயிரிழந்தார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாணவி உயிரிழந்ததற்கு இந்திய பிரதமர், குடியரசுத் தலைவர், மக்களவை சபாநாயகர், டெல்லி முதல் அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் இந்திய பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ மாணவி உயிரிழந்ததற்கு, அவரது மூளையில் ஏற்பட்ட வீக்கமே முக்கிய காரணமாக அமைந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இது குறித்து சிங்கப்பூர் மருத்துவமனை அதிகாரி கூறுகையில், மாணவி மரணத்திற்கு மூளையில் ஏற்பட்ட பாதிப்பே முக்கிய காரணம். டில்லி மருத்துவமனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக பல்வேறு உறுப்புகள் செயலிழந்து விட்டது என கூறினார். 

டில்லியில் பலாத்காரத்துக்கு உள்ளான மாணவி சிங்கப்பூரில் மரணம் அடைந்ததை அடுத்து, புது தில்லி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அமைதியான முறையில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜந்தர் மந்தர் பகுதியில் கூடியுள்ள மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியும், அமைதியாக அமர்ந்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வன்கொடுமைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி மௌன அஞ்சலியும், பள்ளிச் சிறுமிகள் சார்பில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்து கோஷங்கள் எழுப்பியவாறு அமர்ந்திருந்தனர்.இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது:-
 
நாட்டு மக்கள் தங்கள் சகோதரியை இழந்துவிட்டனர். இந்த நேரத்தில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஒரு தாய் என்ற முறையில் அனைவரின் உணர்வுகளையும் நான் புரிந்துகொண்டுள்ளேன்.
 
உயிரிழந்த மாணவிக்கு கட்டாயம் உரிய நீதி கிடைக்கும். குற்றவாளிக்கு தகுந்த கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire