lundi 10 décembre 2012

கடல்வழியே நாளை கூடங்குளம் முற்றுகைப் போராட்டம்- ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு

இடிந்தகரை: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடக் கோரி நாளை கடல்வழியே முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளதையடுத்து அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். இடிந்தகரையில் நேற்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூட வலியுறுத்தி கடல்வழியே படகுகளில் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இந்த கடல் வழி முற்றுகைப் போராட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் கலந்து கொள்கின்றனர்.அதே நேரத்தில் இதர மாவட்டங்களில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர். இப்போராட்ட அறிவிப்பையடுத்து கூடங்குளம் பகுதியில் 1500 போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். பிற தென் மாவட்டங்களிலிருந்தும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருக்கின்றனர். போராட்டக்காரர்கள் அணு உலைக்குள் சென்றுவிடாதவாறு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கு முன்பு கடந்த அக்டோபர் மாதம் கடல்வழி முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்க

Aucun commentaire:

Enregistrer un commentaire