mercredi 12 décembre 2012

சிதார் மேதை ரவி சங்கர் காலமானார்

சிதார் மேதை பண்டிட் ரவி சங்கர் காலமானார். அவருக்கு வயது 92. 

சிதார் மேதை பண்டிட் ரவி சங்கருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து அமெரிக்காவின் லா ஜோல்லாவில் உள்ள ஸ்கிரிப்ஸ் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை சேர்க்கப்பட்டார்.  அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 4.30 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92. அவருக்கு சுகன்யா என்ற மனைவியும், நோரா ஜோன்ஸ், அனோஷ்கா சங்கர் ஆகிய மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவருமே இசைத்துறையில் பிரபலமாக உள்ளனர். 

இந்திய இசையை மேற்கத்திய உலகிற்கு கொண்டு சென்ற பெருமை ரவி சங்கரையே சாரும். இறுதி காலம் வரை அவர் இசையுலகில் ஆர்வமாக இருந்தார். ஏற்கனவே கிராமி விருது பெற்ற ரவி சங்கர் தற்போது மீண்டும் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து அவருடைய மகள் அனோஷ்கா சங்கரின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

அவரது இன்னொரு மகளான நோரா ஜோன்ஸும் கிராமி விருதுகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டுக்கான கிராமி விருது போட்டியில் தனது தந்தை தான் வெற்றி பெறுவார் என்று அனோஷ்கா தெரிவித்திருந்தார். 

Ravi Shankar : raga puriy-Kalyan

Aucun commentaire:

Enregistrer un commentaire