samedi 7 juin 2014

இந்தியாவில் இலங்கை பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் 17,000 பேர் குறித்து பதிவுகள் இல்லை

இந்திய அகதி முகாம்களில் பிறந்த இலங்கை பிள்ளைகள் 17 ஆயிரம் பேர் தொடர்பில் உரிய பதிவுகள் இல்லை என்று தி ஹிந்து தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இவர்களுக்கு உதவ முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், ஈழம் அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் நிறுவனர் சந்திரஹாசன் வெளியிட்டுள்ள தகவலில்,குறித்த பிள்ளைகளை பதிவு செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட நடமாடும் சேவையை தமிழக அரசாங்கம் நிறுத்தியமையை அடுத்து இந்த விடயம் கிடப்பில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.இலங்கை பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் களை பெற்றுக்கொள்வதற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு பிறப்பு சான்றிதழ்கள் தேவை. எனினும், பெரும்பாலான பெற்றோருக்கு பிறப்பு சான்றிதழ்கள் இல்லை என்றும் சந்திரஹாசன் சுட்டிக்காட்டியுள்ளார்

Aucun commentaire:

Enregistrer un commentaire