mercredi 4 juin 2014

ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர்களிடமும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் ஜெயலலிதா கோரிக்கை

modi jeyaஇலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைப் பிரித்து தனி ஈழம் அமைக்கஇலங்கைத் தமிழர் மத்தியும் புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை,இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் ஜெயல்லிதா, இலங்கை, தமிழகம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார். இலங்கை பிரச்சினை குறித்து, அக்கடிதத்தில். ஜெயலலிதா, இலங்கையில் நடந்த இனப் படுகொலையைக் கண்டித்து ஐநாவில் இந்தியா கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும், தனித் தமிழ் ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர்களிடமும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்த வேண்டும், பாக் நீரிணையில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளையும் அவர்களது பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும், 1974, 76ஆம் வருட ஒப்பந்தங்களை மத்திய அரசு ரத்துசெய்து, கச்சத்தீவை மீட்க வேண்டும், என்றெல்லாம் கோரியிருக்கிறார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire