dimanche 15 juin 2014

தலிபான் தீவிரவாதிகள் சிறிலங்காவிலும்?

சிறிலங்காவுக்குள் தலிபான் தீவிரவாதிகள் செயற்படுவதாக, அனைத்துலக காவல்துறையினால், சிறிலங்கா புலனாய்வு முகவர் அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
மத்தியகிழக்கு மற்றும் ஏனைய ஆசிய நாடுகளுக்கு இடையிலான பயணங்களுக்கான ஒரு இடைத்தங்கல் நாடாக, தலிபான்கள் சிறிலங்காவைப் பயன்படுத்தி வருவதாக,அனைத்துலக காவல்துறை தெரிவித்துள்ளது. 
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, தலிபான்கள் சிலர் சிறிலங்காவுக்குள் நுழைந்திருக்கலாம் என்று சிறிலங்காவின் புலனாய்வுச் சேவைகள் கருத்து வெளியிட்டுள்ளன. 
அவர்கள் கொழும்பு மற்றும் காத்தான்குடியில், உள்ள உள்ளூர்காரர்களுடன் இணைந்து கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில், ஈடுபடுவதாகவும் புலனாய்வுப் பிரிவுகள் நம்புகின்றன. 
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் செயற்படும். இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான தலிபான், உலகளாவிய ரீதியாக தடை செய்யப்பட்டுள்ள ஒரு அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.ஆப்கனில் தொழிலாளர்களின் மீது தலிபான்கன் தாக்குதல் படம் மேல் உள்ளது.அதில் 36 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire