lundi 16 juin 2014

அமைச்சராக இருக்க வெட்கப்படுகின்றேன்;ஹக்கீம்

நாட்டுத் தலைமையை குற்றவாளியாக காண்பிக்க முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் துணை போகமாட்டாது அமைச்சர் ரவூப் ஹக்கீம்:- அளுத்கமவுக்கு முன் கூறியது:-
எனது மக்களை பாதுகாப்பதற்கு தவறிவிட்ட நான், இந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படுகின்றேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

தர்ஹாநகர் பகுதிக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் ஹக்கீம் அங்கு குழுமியிருக்கும் மக்களிடம் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
'நான் அமைச்சராக இருக்க வெட்கப்படுகின்றேன்' ஹக்கீம்:- அளுத்கமவுக்கு பின் கூறியது:-நாட்டுத் தலைமையை குற்றவாளியாக காண்பிக்க
முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் துணைபோகமாட்டாது
அமைச்சர் ரவூப் ஹக்கீம்
 அளுத்கமவுக்கு முன் கூறியது:-


நாட்டுத் தலைவரை குற்றவாளியாகக் காண்பிப்பதற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் துணையாகமாட்டாதென அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற கட்சியின் 25வது பேராளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனை தெரிவித்தார்.

மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறியதாவது :-

நாட்டில் ஆங்காங்கே முளைவிடுகின்ற இனவாத, மதவாத செயல்களை குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை மு. கா. அவதானமாக நோக்குகின்றது. ஒருசிலரின் வீறாப்பு அறிக்கைகள், முரட்டுச் சம்பவங்கள், மத நிந்தனை காரணமாக ஒட்டுமொத்த சமூகத்தை குறைகூறுவது புத்திசாதுர்யமாகாது.

சிறு சிறு அசம்பாவிதங்களுக்காக அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டுமென்று கோருவதும் பொருத்தமான கோரிக்கையாகாது. நாட்டில் எங்கோவொரு மூலைக்குள் முஸ்லிம்களுக்கு எதிராக அநீதி நடந்தால் சிலர் மு. கா. வை விமர்சிக்கின்றனர். கட்சியை வேரோடு வீழ்த்த முயற்சிக்கும் சிலருக்கு பொதுபலசேனாவின் செயற்படுகள் துணை போகின்றன. ஆனால் எமது கட்சி ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் நம்பியுள்ளது.

எமக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கின்றோம். இதற்காக அரசாங்கத்தின் நம்பிக்கையை வெல்ல வேண்டும் என்ற நோக்கில் நாம் செயற்படுகிறோம். ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் எந்த நேரத்திலும் பாதுகாக்க மு. கா. தயாராகவுள்ள நிலையில் முஸ்லிம்களை பாதுகாக்க அரசாங்கமும் தயாராக வேண்டும். எமது நாட்டுத் தலைவரை குற்றவாளியாக காண்பிக்கும் எத்தகைய முயற்சிகளுக்கும் மு. கா. ஒருபோதும் துணைபோகமாட்டாது என்றும் அர் தெரிவித்தார்.

கொழும்பு புதிய நகர மண்டபத்தில்  மு. கா. வின் 25 வது பேராளர் மாநாடு நடைபெற்றது. காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், கொத்தணி அமைப்பாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் எனப் பெருந்தொகையானோர் கலந்துகொண்டனர்.

கட்சியின் கொள்கைப்பிரமாணம், புதிய அங்கத்தவர்கள் தெரிவு, வருடாந்த நடப்பு அறிக்கைகள் என்பனவும் இதன்போது வெளியிடப்பட்டதுடன் எதிர்காலச் செயற்றிட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டன. மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற தலைவர்களுடன் கட்சியின் பிரதேச மட்ட செயற்பாடுகளை விஸ்தரித்தல் கட்சி பலவீனமாகவுள்ள பகுதிகளுக்கு தலைவர் நேரில் சென்று மக்களைச் சந்திப்பது போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் உரையாற்றிய அனைவரும் மு. கா. வின் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் எம். எச். எம். அஷ்ரபின் ஆளுமைகளை குறிப்பிடத்தவறவில்லை

Aucun commentaire:

Enregistrer un commentaire