dimanche 29 juin 2014

உண்மைகளை எழுதத் தவறாதீர்கள்! அல்பிரெட் துரையப்பா அவர்களை நினைவு கூருவது இக்காலத்தில் பொருத்தமானது

duraiyappaதன் இளம் வயதிலேயே தமிழ் மக்களுக்கான சேவைகளை மேற்கொள்வதற்கு ஆரம்பத்தில் யாழ்ப்பாண மாநகர சபையினதும் யாழ்ப்பாணத் தொகுதியினதும் மக்கள் மனம் கவர்ந்த உறுப்பினராகவும் மேயராகவும் விளங்கிய மக்கள் மேயரென்று எல்லோராலும் அழைக்கப்படுகின்ற அல்பிரெட் தங்கராஜா துரையப்பா அவர்களின் 39 வது நினைவை இந்த இணையத்தினூடாகப் பகிர்ந்து கொள்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாண நகரம் இருந்த நிலைமையையும் திரு துரையப்பா அவர்கள் யாழ் மேயராக இருந்த காலத்திற்குப் பின்னர் யாழ் நகரம் அபிவிருத்தி அடைந்த விடயத்தினையுமுங்கள் மனக் கண்முன் நிறுத்த விரும்புகின்றோம்.
சாதாரண பொதுமக்களின் அன்றாட பாவனைக்ககான யாழ் பஸ் நிலையம் பயணிகளினதும் ஏனையவர்களின் கவனத்திற்குரியதாக மாற்றப்பட்டதும் யாழ் பொது நூலகம் 1954 பங்குனி 29 சாம் சபாபதி அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டு அரைகுறை நிலையில் இருந்ததை 1959ல் தனது இளம் வயதில் யாழ் மேயராக வந்ததும் இந்தியாவிலிருந்து சிற்பக் கலைஞர்களை அழைத்து அந்நூல் நிலையத்தை ஆசியாவின் சிறந்த நூல் நிலையமாக மாற்றியமைத்த பெருமை அல்பிரெட் துரையப்பா அவர்களுக்கே உரியது. இந்நூல் நிலையத்தை பொது மக்களின் பாவனைக்கு மேயர் துரையப்பா அவர்கள் 1959 ஐப்பசி 11ல் பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார். 1960,1966,1970,1975ம் ஆண்டுவரை மக்கள் மேயர் என்ற நாமத்துடன் துரையப்பா திகழ்ந்து வந்தார். இக்காலங்களில்தான் யாழ்ப்பாண libraryமாநகரசபைக்கான கட்டிடம்,யாழ் திறந்தவெளி அரங்கு,துரையப்பா விளையாட்டரங்கு, (விளையாட்டரங்கின் காணியின் ஒரு பகுதி திரு துரையப்பா குடும்பத்தினருக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது) யாழ்ப்பாண நவீன சந்தை,நல்லூர்க் கல்யாண மண்டபம், யாழ் நகர்த்தில் ஒற்றை வழிப் பாதைகளை இரு வழிப்பாதைகளாக்கியதும்,யாழ் நகரை அழகுபடுத்தியத்குடன்,தமிழ் வளர்த்த பெரியார்களுக்கும் புலவர்களுக்கும் சிலை வைத்து அழகு பார்த்ததையும்,யாழ்ப்பாணத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்று உறுதியாக நின்று அந்தப் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமானவர்களில் துரையப்பாவும் ஒருவர்.அத்தோடு 1974ல் பல்கலைக்கழகத் திறப்புவிழாவை சிறப்பாக நிறைவுசெய்து யாழ் முற்றவெளி மைதானத்தில் பகிரங்கக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்து இலங்கையின் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்கா உட்பட 22 அமைச்சர்களை அழைத்து பிரமாண்டமான கூட்டத்தை நடாத்தியதுடன் அன்றைய காலகட்டங்களில் அன்றைய அரசுக்கு எதிராக பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட சில தமிழ் இளைஞர்களை தடுத்து வைத்திருப்பதை அவர்களின் எதிர்கால நலனில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கவிடம் மகஜரைக் கையளித்து அவர்களை விடுதலை செய்யும்படி பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டார்.
duraiyappa2துரையப்பா ஏழைகளின் தொண்டன் என்பதையும் அவர் சாதி,மத,மொழி,இனம் என்பதற்கப்பால் மனிதத்தை நேசித்ததையும் அக்கால கட்டங்களைச் சார்ந்தவர்கள் நன்கு அறிவார்கள். யாழ்ப்பாண கர்நாடக சபா தங்கள் ஆண்டுவிழாவில் மேயர் துரையப்பா அவர்களை பிரதம விருந்தினராக  அழைத்திருந்தார்கள். அவ்விழாவில் ஒரு தாழ்த்தப்பட்ட தமிழ்க் கலைஞர் ஒருவரை பங்கு கொள்ள விடாமல் தடுத்ததை அறிந்த அல்பிரெட் துரையப்பா அவ்விழாவில் பங்கு கொள்வதைப் பகிஸ்கரித்தார். இதனால் துரையப்பா அவர்களின் நேசத்திற்குரிய மக்களாக தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றும் இருக்கிறார்கள். தான் தலைமை தாங்கிய மாநகர சபையிலும், யாழ் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலும் தான் சார்ந்த அரசிடமும் வேலை வாய்ப்புகளை தமிழ் இளைஞர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதில் முன் நின்றார். தனது சட்டத் துறையைப் பயன்படுத்தி பணம் எதுவும் அறவிடாமல் இலவசமாக நீதிமன்றங்களில் ஆஜரானார். மக்கள் குறைகளைக் கெட்டறிந்து அவர்களின் இடங்களுக்கே நேரடியாகச் சென்று குறை நிறைகளைப் பார்வையிட்டு மக்களுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்த ஒரு மக்கள் மேயர் துரையப்பா அவர்கள். அவருடைய சேவைகளை எழுதுவதற்கு நிறைய உண்டு. இருந்தபோதிலும் நீட்டிக் கொண்டு போகாமல் அவருடையduraiyappa.tombநினைவு தினமாகிய இன்று அவரை நினைவு கூருகிறோம். அவர் ஒரு கிறீஸ்தவனாக இருந்தபோதிலும் இந்து மதத்திலும் நம்பிக்கை உள்ளவராக இருந்த கார்ணத்தினால் பொன்னாலை வரதராசப் பெருமாள் கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். எந்த இளைஞர்களை சிறயிலிருந்து விடுதலை செய்ய வேண்டுமென்று கேட்டிருந்தாரோ அவர்களில் ஒரு சிலரின் துணையுடனே துரையப்பா அவர்கள் அழிக்கப்பட்டார். துரையப்பாவின் காலங்களில் யாழ்ப்பாணம் கண்ட மாற்றங்களின் பின்னர் யாழ்ப்பாணம் எவ்வித அபிவிருத்தியும் அடையவில்லை என்பதை சகலரும் அறிந்து. அல்பிரெட் துரையப்பா அவர்களை நினைவு கூருவது இக்காலத்தில் பொருத்தமானது.

Aucun commentaire:

Enregistrer un commentaire