vendredi 6 juin 2014

இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை

Lankan Lionsஇலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித்தொடரை இலங்கை அணி 3:2 என்ற ரீதியில் கைபற்றியுள்ளது.
ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் 6 விக்கெட்களினால் வெற்றி பெற்று இலங்கை அணி தொடரைத் தனதாக்கியது.
இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 48.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் அலஸ்ரெயர் குக் 56 ஓட்டங்களையும், இயன் பெல் 37 ஓட்டங்களையும், கிறிஸ் ஜோர்டான் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் லசித் மலிங்க 50 ஓட்டங்களிற்கு  3 விக்கெட்களையும். அஜந்த மென்டிஸ் 50 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் லஹிறு திரிமான்னே ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களையும், மஹேல ஜெயவர்த்தன  53 ஓட்டங்களையும, அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஜேம்ஸ் ரெட்வெல் 30 ஓட்டங்களிற்கு 2  விக்கெட்களைக் கைப்பற்றினார்.
லஹிறு திரிமான்னே போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவான அதே வேளை லசித் மலிங்க தொடர் நாயகனாக தெரிவானார்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி தரப்படுத்தல்களில் இரண்டாமிடத்தைப்  பெற்றுள்ளது.
இரண்டாமிடத்தில் இருந்த இந்தியா அணி மூன்றாமிடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ள அதேவேளை இங்கிலாந்து அணி நான்காமிடத்தை தொடர்ந்தும் தக்க வைத்துள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire