dimanche 13 juillet 2014

உடலுக்கு கெடுதி இல்லை பீர் என்பதற்கான 10 காரணங்கள்!!!

image edit 30பொதுவாக ஆல்கஹால் குடித்தாலே உடலுக்கு கெடுதி என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அளவாக ஆல்கஹாலை எடுத்துக் கொண்டால், நிச்சயம் அவையும் உடலுக்கு நன்மையைக் கொடுக்கும். அதிலும் ஆல்கஹாலில் பீர், விஸ்கி, ஒயின் போன்றவற்றை அளவாக எடுத்து வந்தால், அவை உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். இருப்பினும் இவற்றில் பீர் குடிப்பதால் இன்னும் அதிக அளவிலான நன்மைகள் கிடைக்கும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.
இங்கு பீர் ஏன் உங்களுக்கு கெடுதி இல்லை என்பதற்கு 10 காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்காக பீர் குடிக்க உங்களை ஊக்குவிக்கும் முயற்சியல்ல இது; உங்களுக்கு குடி பழக்கம் இல்லை என்றாலோ அல்லது உடல்நிலை ஒப்புக் கொள்ளவில்லை என்றாலோ நல்லது தான். இருப்பினும் நம் நாட்டில் பால் குடிக்காமல் இருக்கும் ஆண்மகனை கூட காண முடியும். ஆனால் பீர் குடிக்காமல் இருக்கும் ஆண் மகனைக் காண முடியாது.
பீர் குடிப்பவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வார்கள் ஆல்கஹால் குடித்தால் விபத்துக்களை சந்திப்பீர்கள், நிலை குலைந்து போவீர்கள், புற்றுநோய் வரும், கல்லீரலில் இழைநார் வளர்ச்சி ஏற்படும் மற்றும் இன்னும் பல கொடிய ஆபத்துக்களை சந்திக்க நேரிடும். ஆனால் நீங்கள் குடிக்கவே இல்லையென்றால், அதுவும் கூட உங்களுக்கு நல்லதல்ல என பல ஆய்வுகள் கூறுகிறது. அதிகமாக குடிப்பவர்கள் மற்றும் குடிக்காதவர்களை விட, கொஞ்சமாக குடிப்பவர்கள் நீண்ட காலம் வாழ்வதாக தனிப்பட்ட ஆய்வுகள் பல கூறியுள்ளது. கொஞ்சமாக குடிப்பதற்கு பீர் சிறந்ததாகும். காரணம் ஒயின் அல்லது இதர பானங்களை விட இதிலுள்ள குறைந்தபட்ச ஆல்கஹால் தான்.
இயற்கையான பீரில் பல பதப்படுத்தும் பொருட்களும், அடிமைப்படுத்தும் பொருட்களும் கலக்கப்பட்டிருப்பதாக எல்லாம் தெரிந்த சில அறிவு ஜீவிகள் கூறுவார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், ஆரஞ்சு ஜூஸ் அல்லது பாலை போல் பீரும் இயற்கையான ஒரு பானம் என்பதே உண்மையாகும். பீரில் உள்ள அல்கஹாலே பதப்படுத்தும் பொருட்களாக செயல்படுவதால் அதற்கென தனியாக அடிமைப்படுத்தும் பொருள் ஏதும் தேவைப்படுவதில்லை.
பீரில் கலோரிகள், கார்போஹைட்ரேட், கொலஸ்ட்ரால் குறைவு முழுமையான இயற்கை பானமான பீரில் கலோரிகள் குறைவாக உள்ளது. 12 அவுன்ஸ் பாலில் உள்ள அதே அளவு கலோரிகள் தான் 12 அவுன்ஸ் கின்னஸ் பீரில் (125 கலோரிகள்) உள்ளது. ஆரஞ்சு ஜூஸை (150 கலோரிகள்) விட இது குறைவான அளவாகும். ஊட்டச்சத்திற்காக பீரை மட்டும் பருகி வருகிறீர்கள் என்றால், ஒரு மணிநேரம் நடை கொடுப்பதற்கு ஈடாக தினமும் ஒரு பீரை பருக வேண்டும். அப்போது தான் தினமும் தேவையான 2000-2500 கலோரிகள் நமக்கு கிடைக்கும். ஆனால் அவ்வளவு குடிக்க வேண்டும் என யாரும் சொல்லவில்லை. பீரை தவிர குறைவான கலோரிகளை கொண்ட இயற்கை பானமாக விளங்குவது டீ, ப்ளாக் காபி மற்றும் தண்ணீர். எடை அதிகரிக்க செய்யும் கார்போஹைட்ரேட் பீரில் அதிகமாக உள்ளதா என்றால் மீண்டும் இல்லை. சராசரியாக 12 அவுன்ஸ் பீரில் 12 கிராம் கார்ப்ஸ் உள்ளது. 2000 கலோரி உணவில் 300 கிராம் கார்போஹைட்ரேட் சேர்த்துக் கொள்ளலாம் என அமெரிக்க அரசாங்கம் கூறுகின்றது. அரசாங்கம் கூறும் கணக்குப்படி பார்த்தால் நீங்கள் தினமும் ஒரு கேஸ் பீரை (24 பீர்கள்) குடித்த பிறகு அடுத்த கேஸையும் திறக்க வேண்டியிருக்கும். கார்ப்ஸ் சேர்த்துக் கொள்ள வேண்டுமானால் ஆப்பிள் பழத்தை கொரியுங்கள் அல்லது சோடா குடியுங்கள். ஒவ்வொன்றிலும் 35-40 கிராம் கார்ப்ஸ் உள்ளது – இது பீரில் உள்ளதை போன்ற மூன்று மடங்காகும். மேலும் பீரில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை.
கொலஸ்ட்ராலை மேம்படுத்தும் பீர் பீரில் கொலஸ்ட்ரால் இல்லாததோடு மட்டுமல்லாமல், உங்கள் உடலின் கொலஸ்ட்ராலையும் மேம்படுத்தும். பீரை சீரான முறையில் குறைவாக குடித்து வந்தால், உங்களின் HDL/LDL கொலஸ்ட்ரால் விகிதங்கள் சரியான அளவில் இருக்கும். உங்கள் உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது: HDL, என்ற நல்ல கொலஸ்ட்ரால் உங்கள் நரம்புகளை செயல்படுத்தி அனைத்தையும் சீராக இயங்க வைக்கும்; LDL, என்ற கெட்ட கொலஸ்ட்ரால் உங்கள் நரம்புகளில் அடைப்பை உண்டாக்கி ஆபத்தை உண்டாக்கும். பீரில் உள்ள ஆற்றல் அதனை சுத்தப்படுத்தி HDL அளவை அதிகரிக்க வைக்கும். தினமும் ஒரு பீர் குடித்தால் உங்கள் HDL அளவு 4% அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகிறது.
சூட்டை தணிக்க பீர் உதவும் தற்போதைய சமுதாயத்தில் குறைவாக குடிப்பது உங்கள் உடல்நலத்திற்கு நல்லதாகும். அதனால் வெளியே செல்லும் போது, அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து கொஞ்சம் பீர் குடியுங்கள்.
பீரில் அதிகமான வைட்டமின் பி உள்ளது குடிக்கு எதிராக இயங்கும் குழுக்கள் பல வருடங்களாக ஒப்புக்கொள்ளாத போதும், பீரில், அதுவும் வடிகட்டாத அல்லது மெல்லிய வடிகட்டிய பீரில், அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. பீரில் அளவுக்கு அதிகமான வைட்டமின் பி அடங்கியுள்ளது, முக்கியமாக ஃபோலிக் அமிலம். இது நெஞ்சு வலியை தவிர்க்கும். பீரில் கரையத்தக்க நார்ச்சத்தூம் உள்ளது. இது உங்களை சீராக வைக்க உதவி, உடல் உறிஞ்சும் தேவையற்ற கொழுப்புகளை அகற்ற உதவும். பீரில் முக்கிய அளவில் மக்னீஷியம் மற்றும் பொட்டாசியமும் உள்ளது.
தண்ணீரை விட பீர் பாதுகாப்பானது தண்ணீர் குடிக்க வேண்டாம் என ஏதாவது இடத்தில் நீங்கள் அறிவுறுத்தப்பட்டால், உள்ளூர் பீரை பருகுவது பாதுகாப்பாக விளங்கும். அடைக்கப்பட்ட பாட்டிலில் கிடைக்கும் நீரை விட பீர் பாதுகாப்பானது. கொதிக்க வைத்து, பின் புளிக்க வைத்து, அதை பாட்டிலில் அடைக்கும் வரை சுத்தமாக வைக்கப்பட்டிருக்கும். அப்படி செய்யாவிட்டால் அது கெட்டு போய்விடும். அதனால் அதனை விற்க முடியாது. ஒரு வேளை அது கெட்டு போனாலும் கூட, அதில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பாக்டீரியா எதுவும் இருப்பதில்லை. அதனால் தண்ணீரை விட பீர் சிறந்தது.
நெஞ்சு வலியை தவிர்க்கும் பீர் வைட்டமின் போக இதில் வேறு பயனை தேடுகிறீர்களா? கண்டிப்பாக உயிரை காக்கும் குணத்தை கொண்டுள்ளது இது. அதீத கொழுப்புள்ள உணவுகளை உட்கொண்டு, அதிகமாக குடித்து, புகைப்பிடித்து ஆட்டம் போட்டாலும் உலகத்தில் உள்ள பிற மக்களை காட்டிலும் எப்படி பிரெஞ்ச் மக்களுக்கு இதய நோய்கள் குறைந்த அளவில் உள்ளது என்று தெரியுமா உங்களுக்கு? அதற்கு காரணம் சிகப்பு ஒயின் மற்றும் அதிலுள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள். சிகப்பு ஒயினில் உள்ளதை போல் வேறு எதில் இவ்வளவு ஆன்டி-ஆக்சிடன்ட் உள்ளது? கருமையான பீரில்! அமெரிக்கன் இருதய சங்கத்தின் படி, பிற மதுபானத்தை விட ஒயினில் உடல்நல பயன் அதிகமாக உள்ளது என்பதில் தெளிவான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் தினமும் மூன்று முறை பீர் குடித்தால் இதய நோய்கள் வருவது 24.7 சதவீதம் குறையும் என பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னல், 1999-ல் கூறியுள்ளது.
புற்றுநோயை எதிர்க்கும் பீர் பீரில் மற்றொரு முக்கிய உடல் நல பயனும் உள்ளது. அதில் சாந்தோஹுமோல் என்ற ப்ளேவோனாய்ட்டுகள் அடங்கியுள்ளது. சாந்தோஹுமோல் என்ற சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்சிடன்ட்கள், புற்றுநோயை உண்டாக்கும் என்ஸைம்களை எதிர்த்து போராடும். சோயாவில் உள்ளதை விட இதில் உள்ள வீரியம் அதிகம் என ஆர்ஜியான் ஸ்டேட் பல்கலைகழகத்தை சேர்ந்த என்விரான்மென்டல் & மாலிகுளார் டாக்சிகொலாஜி துறையை சேர்ந்த டாக்டர் க்ரிஸ்டொபல் மிரண்டா கூறியுள்ளார். சாந்தோஹுமோல் நமக்கு மிகவும் நன்மையை அளிப்பதால், ஜெர்மன்காரர்கள் இதனை அதிகமாக சேர்க்கின்றனர்.
தொந்தியை உண்டாக்குவதில்லை பீர் லண்டனில் உள்ள பல்கலைகழக கல்லூரி மற்றும் ப்ரேக்கில் உள்ள இன்ஸ்டிட்யூட் கிளினிக் எக்ஸ்பெரிமெண்டல்னி மெடிசினியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 2003-ல், அதிகமாக பீர் குடிப்பவர்களுக்கும், தொப்பைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளனர். குடிக்காதவர்கள் மற்றும் ஒயின் அல்லது பிற பானங்களை குடிப்பவர்களை விட, பீர் குடிப்பவர் தடியாக இருப்பார்கள் என நம்பப்படுகிறது. ஆனால் பீருக்கும் உடல் பருமனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படியே இருந்தாலும் அது சொற்ப அளவிலேயே தான் இருக்கும். சீரான முறையில் குறைவாக பீர் குடிப்பவர்களுக்கு தொப்பை வைக்காது. அதே போல குடிக்காதவர்களை காட்டிலும் அவர்கள் உடல் எடை குறைவாகவே இருப்பார்கள். ஏனெனில் பீரானது உங்கள் மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கும். மேலும் கொழுப்பை உறிஞ்ச விடாமல் பாதுகாக்கும். அதனால் அதனை குறைவாக குடிக்கலாம். அவ்வளவு தான். பீர் குடியுங்கள். நீண்ட நாள் சந்தோஷமாக வாழுங்கள். கொழுப்பு வராது. உடல் எடையும் குறையும். மெட்டபாலிசம் ஊக்குவிக்கப்படும். உடல்நலம் மேம்படும். நெஞ்சு வலி மற்றும் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும். இன்னும் என்ன வேண்டும்?

Aucun commentaire:

Enregistrer un commentaire