samedi 12 juillet 2014

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் தலைக்கு ரூ.60 கோடி பரிசு: அமெரிக்கா

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைவர் குறித்து தெரிவிப்பவருக்கு 60 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈராக்கின் சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்,ஷியா பிரிவினர்களுக்கு எதிராக உள்நாட்டு போரினை அரங்கேற்றி வருகின்றனர்.
ஷியா பிரிவன மக்களை கொன்று குவிப்பதுடன், மொகசூல், திக்ரித், கிர்குக், பாய்ஜரி, பலூஜா உள்ளிட்ட பல நகரங்களை தங்களது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த தீவிரவாத அமைப்பின் தலைவராக இருக்கும் அபுபக்கர் அல்-பக்தாதி தாங்கள் உரூவாக்கிய இஸ்லாமிய நாட்டிற்கு தன்னை தானே "காலிபாத்" (தலைவர்) என அறிவித்து கொண்டார்.
இவர் கடந்த 2011ம் ஆண்டிலேயே அமெரிக்காவால் குற்றவாளி என தெரிவிக்கப்பட்டதுடன், தீவிரமாக தேடப்பட்டும் வருகிறார்
எனவே இவரை, யாரேனும் கைது செய்து ஒப்படைத்தாலோ அல்லது அவர் குறித்து தகவல் தெரிவித்தாலோ, அந்நபருக்கு  ரூ 60 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire