dimanche 13 juillet 2014

பாதிரியார்கள் திருமணம் செய்துகொள்ள முடியும்;போப்

போப் பிரான்சிஸ்கத்தோலிக்கத் திருச்சபையில் பாதிரியார்கள் திருமணம் செய்துகொள்ள இருந்துவரும் தடையை காலப்போக்கில் தளர்த்த முடியும் என்று தான் நம்புவதாக போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் தெரிவித்துள்ளார். பாதிரியார்கள் பிரம்மச்சாரிகளாகவே வாழ வேண்டும் என்று 11 நூற்றாண்டு காலமாக இருந்துவருகின்ற விதிமுறையை மாற்றுவதற்கான தீர்வுகள் உண்டு என்றும், அவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பது தனது வேலை என்றும் பாப்பரசர் தெரிவித்தார். போப் பிரான்சிஸ்இத்தாலிய செய்தித்தாளான லா ரிபப்ளிக்காவுக்கு அளித்த ஒரு பேட்டியில், பாதிரியார்களின் சிறார் பாலியல் துஷ்பிரயோக விவகாரம் கத்தோலிக்கத் திருச்சபையை பீடித்துள்ள தொழுநோய் என்று ஃபிரான்சிஸ் கூறினார். பேராயர்களிலும், கார்டினல்களிலும் கூட சிறார் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்கள் இருக்கிறார்கள் என்றும், கத்தோலிக்கத் திருச்சபை பாதிரிமாரிகளில் சுமார் இரண்டு சதவீதம் பேர் சிறார்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். தேவையான கண்டிப்போடு இப்பிரச்சினைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தான் உறுதியுடன் இருப்பதாய் அவர் தெரிவித்துள்ளார். கத்தோலிக்கத் திருச்சபை பாதிரிமார்களின் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் போப்பாண்டவர் பிரான்சிஸ் ஏற்கனவே கவலை வெளியிட்டருந்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire