jeudi 17 juillet 2014

இலங்கையில் தனி நாடு ஏற்படுத்தும் கொள்கையினை கைவிட்டது தமிழ் தேசிய கூட்டமைப்பு (கூத்தமைப்பு)

இலங்கையில் தனி நாடு ஏற்படுத்தும் கொள்கையினை கைவிட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு வடக்கு மாகாண சபை தேர்தலின் போது மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியில் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தனி நாடு அமைப்பதாக தமிழ் தேசிய கட்சி அறிவித்திருந்ததாக கூறி, இந்த அறிவிப்பு நாட்டை துண்டாடும் செயல் என்று குற்றம்சாட்டி இலங்கையில் செயல்படும் ஆறு பிரதான சிங்களக் கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன.
இந்த ஆறு மனுக்களையும் ஒன்றாக இணைத்து விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட், இந்த குற்றச்சாட்டில் உங்களின் நிலைப்பாடு என்ன? என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியிடம் விளக்கம் கேட்டிருந்தது.
இதற்கு பதிலளித்து எழுத்துபூர்வமாக பிரம்மாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, ’இலங்கையை ஒற்றையாட்சி முறை கொண்ட நாடாக ஏற்றுக் கொள்வதாகவும், நாட்டை இரண்டாக பிரிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை’ எனவும் தெரிவித்துள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire