jeudi 24 juillet 2014

பொட்டம்மானும் பிரபாகரனும் புலிகளும் இருந்திருந்தால் 13 வயசுப்பெடியனுக்கே சல்யூட் அடிச்சிருக்க வேணும் கூட்டமைப்பு

பொட்டம்மானும் புலிகளும் பிரபாகரனும் இல்லாமற் போனதிலTna_jaffnaசந்தோசப்படுகிற ஆட்கள் ஆராயிருக்கும் எண்டு சொல்லுங்கோ பாப்பம். 
சந்தேகமேயில்லை. கூட்டமைப்புக்காரரர்தான். 
ஏனெண்டால், பொட்டம்மானும் பிரபாகரனும் புலிகளும் இருந்திருந்தால், இப்பவும் சம்மந்தன் அடிக்கடி கிளிநொச்சிக்குப்போய், காவலிருந்து, தமிழ்ச்செல்வனுக்கோ நடேசனுக்கோ அல்லது கழுத்தில சயனைட் குப்பியைக் கட்டியிருக்கிற 13 வயசுப்பெடியனுக்கோ சல்யூட் அடிச்சிருக்க வேணும்.
செல்வம் அடைக்கலநாதனும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் உரத்துக் கதைக்கேலாமல், தொண்டைக்குள்ளேயே வார்த்தைகளை அடக்கி விழுங்கியிருக்க வேணும். 
ஐங்கரநேசனோ, சிறிதரனோ, அனந்தியோ, குருகுலராஜாவோ, சிவமோகனோ  அரசியற் பக்கமே தலைவைச்சிருக்க மாட்டினம். இதுக்குப் புலிகள் விட்டிருக்கவும் மாட்டினம். 
சர்வணபவன் கொழும்பை விட்டே வந்திருக்க மாட்டார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு இன்னும் சந்தாப்பணம் கட்டிக்கொண்டுதானிருந்திருப்பார். 
கஜதீபன், சயந்தன் போல இருக்கிற பெடியளப் புலிகள் பங்கர் வெட்டத்தான் விட்டிருப்பினம். ஆனால், புலிகளுக்கே தண்ணிகாட்டிப்போட்டு, அவுஸ்ரேலியாவுக்கோ இத்தாலிக்கே இந்தப் பயல்கள் நீந்திப்போயிருப்பாங்கள். 
புலி இல்லையெண்டதால தாங்கள்தான் இப்ப தனிக்காட்டு ராஜாக்கள் எண்ட நினைப்புக் கனபேரிட்ட வந்திருக்கு இருக்கு. 
புலிகள் இல்லையெண்டதால தாங்கள் எல்லாம் இப்ப பெரிய தமிழ்த்தேசியவாதிகள், தியாகிகள், புனிதர்கள், போராளிகள், தேசியத்தலைவர்கள், தளபதிகள் எண்ட நினைப்பு வேற.
புலிகள் இருந்திருந்தால் இப்பிடி ஆருக்கும் பயமில்லாமல் குத்துக்கரணம் அடிக்கலாமோ! 
எல்லாத்துக்கும் மேல றிலாக்ஸாக அரசியல் செய்யிறதுக்கு, ‘பொட்டம்மானின்ரை டிப்பாட்மென்ற்’ விட்டிருக்குமோ?
சிறிதரனை அவற்றை மச்சானே போட்டுத்தள்ளியிருப்பார். 
சரவணபவன் இப்பவும் வித்தியாதரன்ரை காலைக் கட்டிப்பிடிச்சுக்கொண்டிருந்திருப்பார். 
சத்தியலிங்கம், சிவாஜிலிங்கம் எல்லாம் பெட்டிப்பாம்பாகச் சுருண்டு கிடந்திருப்பினம். 
அதுக்காக இப்பிடி அவை செய்யிறதெல்லாம் சரியெண்டு நான் சொல்ல வரேல்ல. ஆனால்,  புலிகள் இருந்திருந்தால் இவை இப்பிடியா இருந்திருப்பினம்?
இல்லாட்டிக்கு புலிகளை வைச்சுக்கொண்டு அமிர்தலிங்கத்துக்கு அஞ்சலி செலுத்துவினமோ...?
புளொட் உமாமகேஸ்வரனுக்கும் பத்மநாபாவுக்கும் ரெலோ சிறிசபாரட்ணத்துக்கும் வணக்க நிகழ்வுகளை நடத்தலாமோ....?
பஸிலுக்கும் மகிந்தருக்கும் சந்திரசிறிக்கும் ஒரு முகம். புலம்பெயர் உறவுகளுக்கு ஒரு முகம். தமிழ் மக்களுக்கு ஒரு முகம் எண்டு பல முகங்களைக் காட்டலாமோ?
புலித்தேசியமும் பேசிக்கொண்டு, புலிகளால கொல்லப்பட்டவைக்கு அஞ்சலியும் செய்து கொண்டு, ரட்டை முகம் காட்டுகிற சங்கதிதான் நடந்திருக்குமோ...!
அமிர்தலிங்கத்தாற்றை நினைவு அஞ்சலி நிகழ்வைத் தமிழரசுக்கட்சி கொண்டாடுது. அமிர்தலிங்கத்தைக் கொண்டது புலிகள். அப்பிடியெண்டால்.... புலிகளை வைச்சுப் பிழைப்பு நடத்திற அனந்தியும் சிறிதரனும் குருகுலராஜா, அரியரத்தினம், பசுபதிப்பிள்ளை, ரவிகரன், கஜதீபன் போன்ற ஆட்களும் இதுக்கு ஏன் வாய் திறக்காமல் பேசாமல் இருக்கினம்?
அமிர்தலிங்கத்தைப் புலிகள் கொண்டது சரியெண்டு சொல்லுகினமா? இல்லையெண்டால், புலிகள் செய்தது பிழையெண்டதை இப்பதான் தாங்கள் உணருகினம் எண்டு சொல்லுகினமா? 
அப்பிடியெண்டால், இனிமேல் புலிகளை இவை ஆதரிக்க மாட்டினமா?
ஏனப்பா இப்பிடியெல்லாம் தமிழ்ச்சனத்தைப்போட்டு மடையர்களாக்கிறீங்கள்?
தமிழ்ச்சனங்களும் இதுகளைப்பற்றியெல்லாம் ஒரு நாளுமே சிந்திக்கிறேல்ல. இதுதானே இவைக்கும் (தமிழ்த்தேசியவாதிகளுக்கு) வசதியாய்ப்போச்சு. 
இது சிந்திக்காத மக்களை வைச்சுக்கொண்டு, இனவாதத்தை வளர்த்து, வயற்றை நிரப்பிக் கொள்ளலாம் எண்ட கள்ளச் சிந்தனை. 
இப்ப பொட்டு வைக்கிறதுக்கு ஒரு பொட்டம்மான் இல்லையெண்டதால வந்த வினை இதெல்லாம்....
ஆனால், இவை நினைக்கலாம், அந்தப் பொட்டனுக்கே தண்ணி காட்டினனாங்கள்தானே... அதை விட வேற எதுக்குப் பயப்பிடோணும் எண்டு...
நடக்கட்டும் நாடகம். இந்த நாடகத்துக்கும் ஒரு முடிவு வரும். 
எத்தினை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... இந்த மக்களை....?’
குள்ளநரிக்கூட்டத்தை விரட்டியடிப்போம்... அவர் கொட்டத்தை அடக்குவோம்....’ எண்டு இந்தக் காலங்காத்தால ஆரோ ஒரு பெடியன் பாடிக்கொண்டு போறான். தமிழ்ச் சனத்துக்கு ஏதொ நல்ல சகுனம் போலதான் இருக்கு. 

Aucun commentaire:

Enregistrer un commentaire