samedi 26 juillet 2014

யாழ்தேவி 24 வருடங்களின் பின்னர் யாழ்.நோக்கிப் பயணம்

செப்டெம்பர் 15இல் யாழ். தேவி ரயில் 24 வருடங்களின் பின்னர் மீண்டும் எதிர்வரும் செப் டெம்பர் 15 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணத்திற்கு பயணிக்க இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம தெரிவித்தார். யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், செப்டம்பர் 15 ஆம் திகதி பரீட்சார்த்தமாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை ரயில் சேவை மேற்கொள்ள இருப்பதாக குறிப்பிட்டார். செப்டெம்பர் இறுதியில் கொழும்பு- யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட பின் பொதுமக்களுக்கு யாழ்ப்பாணம் செல்ல அவகாசம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். 30 வருட யுத்தம் காரணமாக வட பகுதிக்கான ரயில் பாதையும் ரயில் நிலையங்களும் முழுமையா அழிக்கப்பட்டன. யுத்தத்தின் பின்னர் வவுனியா வரையே ரயில் சேவைகள் இடம்பெற்றன. இந்திய இர்கொன் கம்பனியுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் வட பகுதிக்கான ரயில்பாதை கட்டம் கட்டமாக மீளமைக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசாங்கத்தின் 183 மில்லியன் டொலர் கடனுதவியுடன் ரயில் பாதை நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire