mardi 22 juillet 2014

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த வாரம் 94 உயிர்களை பறித்தும் சீற்றம்

 பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த வாரம் 94 உயிர்களை பறித்தும் சீற்றம் தணியாமல் சீனாவை தாக்கிய சக்தி வாய்ந்த ரம்மசுன் சூறாவளி புயலுக்கு 16 பேர் பலியாகினர். 
 
நூற்றுக்கணக்கான வீடுகளை தரைமட்டமாக்கி, ஒதுங்க இடமின்றி ஆயிரக்கணக்கான மக்களை தவிக்கவிட்ட ரம்மசுன், நேற்று வியட்நாமையும் சூறையாடியது. தெற்கு வியட்நாமின் லங் சான் மாகாணத்தை புரட்டிப் போட்ட இந்த புயலுக்கு அப்பகுதியில் வசிக்கும் 17 பேர் பலியாகினர். 11 பேர் மின்னல் தாக்கியும், 6 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 
இந்த புயலின் எதிரொலியாக தலைநகர் ஹனாயில் இருந்து வடகிழக்கே சுமார் 220 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குவாங் நின் மாகாணத்தின் மோங் காய் நகரில் பெய்த தொடர் மழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பெருக்கெடுத்தோடிய வெள்ளத்தில் தரைப் பகுதியில் இருந்த மண் அடித்துச் செல்லப்பட்டதால், இங்குள்ள பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. 
 
நிலச்சரிவில் சிக்கி, சில வீடுகள் புதையுண்டு கிடக்கின்றன. புயல் தாக்கிய பகுதிகளில் வசிக்கும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை மீட்ட பேரிடர் மேலாண்மை குழுமத்தை சேர்ந்த மீட்புப் படையினர், அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire