samedi 10 mars 2012

கொல்கத்தா, மார்ச்.10- மேற்கு வங்காள முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி முன்னிலையில் மாவோ யிஸ்டு பெண் தலைவர், கணவருடன் சரண் அடைந்தார்.

மேற்கு வங்காள மாநிலத்தில் மாவோயிஸ்டு இயக்கத்தை ஒடுக்க, மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில், மாவோயிஸ்டு தலைவர் கிஷன்ஜி சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் இருந்த மாவோ யிஸ்டு பெண் தலைவர் சுசித்ரா மகதோ காயத்துடன் தப்பினார். இவரது கணவர் பிரபீரும் மாவோயிஸ்டு இயக்கத்தில் தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று கொல்கத்தாவில் உள்ள தலைமை செயலகத்துக்கு சுசித்ரா மகதோ, தனது கணவர் பிரபீருடன் வந்தார். பின்னர் இருவரும் முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி முன்னிலையில், சரண் அடைந்தனர். அப்போது உயர் காவல்துறை அதிகாரிகளும் இருந் தனர். இதுபற்றி மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், ``சுசித்ரா மகதோ, மாவோயிஸ்டு இயக்கத்தில் இருந்து விலகி, தேசிய நீரோட்டத்துக்கு வந்து இருக்கிறார். அவருக்கும், அவரது கணவருக்கும் தேவையான அனைத்து உதவிகளை யும் அளிப்போம். இன்னும் மாவோ யிஸ்டு இயக்கத்தில் இருப்பவர்கள், இங்கு வந்து சரண் அடைய வேண் டும்'' என்றார். பின்னர் சுசித்ரா மகதோ செய்தி யாளர்களிடம், ``எனக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது. எனவே எனக்கு மருத்துவ உதவி உடனடியாக அளிக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறேன்'' என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire