jeudi 8 mars 2012

விடுதியில் சேர்த்து பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்குள்ளாக்கிய நபர்களை பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் கிளிநொச்சிப் பொலிஸார் சுற்றிவளைத்துப் பிடித்துள்ளனர்

கடந்த 6ம் திகதி கிளிநொச்சியில் வேலை பெற்றுக் கொடுப்பதாக கூறி இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணத்திலிருந்து (வயது17), (வயது 22) இரு இளம்பெண்களை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு கூட்டிச் சென்று பாரதிபுரம் பகுதியில் இயங்கிவரும் லக்கி ரெஸ்ரோறன்ட் என்ற விடுதியில் வைத்து துஸ்பிரயோகம் செய்ய முற்பட்டுள்ளனர். இதனால் குறித்த பெண்கள் கூச்சலிட்டதை தெடர்ந்து, அருகிலுள்ள மக்கள் விடயத்தைப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றர். இதனையடுத்து விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் முகாமையாளர் உட்பட விடுதியிலிருந்த 5பேரையும், பெண்களையும் கைது செய்தனர். உடனடியாக பெண்கள் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து பெறப்பட்ட வைத்திய சான்றிதழுடன் இன்று நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்ப்படுத்தினர். அதனை விசாரணைக்கெடுத்துக் கொண்ட நீதிபதி 22ம் திகதி வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். இதேவேளை குறித்த ரெஸ்ரோறன்ட் பாரதிபுரம் பகுதியிலுள்ள பாரிய படைமுகாமிலுள்ள படையினருக்காகவே இயக்கப்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன. மேலும் கைதுசெய்யப்பட்ட முகாமையாளர் வட்டக்கச்சியில் வயதான பெண்மணியை மிரட்டி 1லட்சம் பணம் கப்பம் பெற்றபோது கைது செய்யப்பட்டிருந்தார். இராணுவத்தினர் என தன்னை அடையாளப்படுத்திக் கண்டு கப்பம் பெற்ற குற்றம் தொடர்பான வழக்கு மாவட்ட நீதிமன்றில் இன்னமும் விசாரணைக்குள்ளது. இதைப்போன்றே ஏனைய சந்தேக நபர்கள் மீதும் குற்றங்களும், அதற்கான வழக்குகளும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Aucun commentaire:

Enregistrer un commentaire