mercredi 21 mars 2012

உலக அரங்கில் இனவாத அரசுக்கான வரைவிலக்கணமாக சிறிலங்கா

உலக அரங்கில் இனவாத அரசுக்கான வரைவிலக்கணமாகஇ சிறிலங்காவை முன்னுதாரணமாக கொள்ளலாம் என IEDஅமைப்பின் பிரதிநிதி கரன் பார்கர் அம்மையார் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைச் சபையில் இனவாதம் இனத்துவேசம் தொடர்பில் இடம்பெற்ற விவாத அமர்வில் கரன் பார்கர் அம்மையார் உரையாற்றியிருந்தார். உலகில் எங்கு இனநெருக்கடி இருக்கின்றதோ அங்கு இனவழிப்பு ஏற்படுத்துவதற்கான வழிநிலையுள்ளது என்ற ஐ.நாவின் முன்னாள் செயலாளர் நாயகம் கோபி அனானின் கூற்றினை மூலதாரணமாக கொண்டு தனது உரையை வழங்கிய கரன் பார்கர் அம்மையார் இனவாத மேலாதிக்க நிலையில், இனவழிப்பு ஏற்படுவதாக சுட்டிக்காட்டினார். ஜெனீவா ஐ.நா உரிமைகள் சாசனத்தில், இனவாத அரசுக்கான வரைவிலக்கணம் இல்லை என்பதனைச் சுட்டிக்காட்டிய கரன் பார்கர் அம்மையார், இன்றைய உலகில் சிறிலங்காவை ஒரு இனவாத அரசுக்குரிய முன்னுதாரணமாக கொள்ளாம் என் வலியுறுத்தினார். இலங்ககைத் தீவின் பெருன்பான்மை இனவாத சிறிலங்கா அரசானது, தமிழ் தேசிய இனத்தின் மீது கட்டவிழ்த்து வரும் இனவழிப்பைஇ அடுக்கிப் பேசிய கரன் பார்கர் அம்மையார் இ 1948ம் ஆண்டு முதல் சிறிலங்கா இனவாத அரசனாது, தமிழர்களின் அரசியல், சமூக இபொருளதார, கலாச்சார உரிமைகளை பறித்தெடுத்து வருகின்றமையை குறித்து கோடிட்டுக்காட்டினார். தமிழர்கள் மீது பயங்கரவாத முலாம்பூசிஇ சர்வதேச மனிதச் சட்டங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் சிறிலங்கா அரசானதுஇ தமிழர்கள் மீது இனவாதத்தை கட்டவிழ்த்து வருவதாக குறித்துரைத்த கரன் பார்கர் அம்மையார் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர் மீதும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சிறிலங்கா பயங்கரவாத முத்திரையை குத்தி வருவனைக் கோடிட்டு, தன்மீதும் இத்தகைய முத்திரையை, சிறிலங்கா இனவாத அரசு குத்தியுள்ளதாக இடித்துரைத்தார். மானிடத்துக்கான உரிமைகளும் பாதுகாப்பும் எனும் ஐ.நாவின் உயரிய சாசனக் கோட்பாட்டுக்கு முன்னால் சர்வதேச சமூகத்தால் கைவிடப்பட்ட இனமான தமிழினம் பெரும் அழிவைச் சந்தித்துள்ளமையை ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையே தெளிவாக எடுத்துரைத்துள்ள நிலையில்இ இனவாத அரசுக்குரிய வரைவிலக்கணத்தை ஐ.நா விரைந்து வரைய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire