samedi 24 mars 2012

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்:

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தனது நிலைப்பாட்டிற்கு இணங்கியே இலங்கை;கு எதிராக இந்தியா வாக்களித்தது எனவும் இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக கரிசனைகள் வெளிப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமென விரும்பியதாகவும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இலங்கையின் இறைமையை இந்தியா மீற விரும்பவில்லை எனவும் புதுடில்லியில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது ஏன் என செய்தியாளர்கள் வினவியமைக்கு பதிலளிக்கும் போதே இந்திய பிரதமர் இவ்வாறு கூறினார். “சாதக பாதகங்களை சீர்தூர்க்கி பார்க்க வேண்டும். நாம் செய்தது இலங்கை தொடர்பான எமது நிலைப்பாட்டிற்கிணங்கியதே. இலங்கையின் இறைமையை மீற நாம் விரும்பவில்லை. ஆனால் கரிசனைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். அதனால் தமிழ் மக்கள் நீதியையும் கௌரவமான வாழ்க்கையையும் அடைய முடியும்” என அவர் தெரிவித்தார்

Aucun commentaire:

Enregistrer un commentaire