mardi 20 mars 2012

எல்லோரும் ஐநா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள தீர்மானத்தை ஏன் ஆதரிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை” என்கிறார் துக்ளக் ஆசிரியர் சோ.

துக்ளக் வார இதழின் மிகப் பிரபலமான ஆசிரியரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான சோ எஸ். ராமசாமி அவர்கள்,மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு, தமிழ்நாட்டில் அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஆதரவு தெரிவிப்பது தேவையற்ற ஒன்று என ஆர்.பகவான்சிங் அவர்களிடம் தெரிவித்தார். கேள்வி: இங்குள்ள மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ்கட்சிகள், ஐநா மனித உரிமைச் சபையில் ஸ்ரீலங்காவுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுபு;புகின்றன. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பதில்: அமெரிக்காவின் தீர்மானம் இவர்கள் நினைப்பதைப்போல, ஸ்ரீலங்காவை கண்டிக்கவில்லை என்பதை இந்த மனிதர்கள் உணர்ந்திருக்கிறார்களா என்பது எனக்குச் சந்தேகமே. அந்த தீர்மானம் கூறுவது, தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினைப் போல, கொழும்பினால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (எல்.எல்.ஆர்.சி) என்கிற ஆணைக்குழு தனது அறிக்கையில் கூறியுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று. அமெரிக்காவின் தீர்மானம் மேலும் வலியுறுத்துவது, தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வினை ஏற்படுத்த வேண்டும் என்பதையும். ஈழக் காரணங்களுக்காக பரிந்து வேண்டுவோர் அதில் எதைக் காண்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கேள்வி: ஸ்ரீலங்கா நடத்திய போர்க்குற்றங்களுக்காக அவர்கள் ஒரு சர்வதேச விசாரணையை கோருகிறார்கள் இல்லையா? பதில்: அமெரிக்காவின் தீர்மானம் போர்க்குற்றங்களைப்பற்றி எதுவும் பேசவில்லை. அது மனித உரிமைகள் மீறல்களைப் பற்றித்தான் பேசுகிறது. ஸ்ரீலங்காவிலுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கூட அதைப்பற்றி தங்களது விரக்தியை வெளியிட்டிருந்தன. இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அதை வாசித்தார்களா என்பது எனக்குத் தெரியவில்லை, ஆனால் இங்கு அத்தகைய ஆக்ரோசமான ஆதரவைக் கோருவதில் ஒன்றுமேயில்லை. இஸ்ரேலின் அத்தகைய மீறல்கள் பற்றி ஐநா மனித உரிமைச் சபை பேசியதற்கு என்ன நடந்தது? அதை எதிர்த்து பேசிய அமெரிக்கா, அது அரசியலாக மாறுகிறது என்று சொன்னது. உலகம் முழுவதும் மீறல்கள் நடக்கும்போது இஸ்ரேலை மட்டும் குறி வைப்பது ஏன்? இந்த நாட்டுக்கு மட்டும் நீங்கள் தனியான ஒன்றைச் செய்கிறீர்கள், அது நடக்காது என்று அமெரிக்கா சொன்னது. மற்றும் அதைத்தான் இந்தியாவும் சொல்கிறது. ஒருவேளை இஸ்ரேலின் மீதுள்ள உலகத்தின் கவனத்தை திசை திருப்பும் நோக்கோடு. மற்ற இடங்களில் கூட மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன என்பதை சாதாரணமாக எடுத்துக் காட்டுவதற்காக வேண்டி அமெரிக்கா இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருக்கலாம். இந்தியா அதன்மீது ஏன் ஆர்வம் காட்ட வேண்டும்? பரிவு காட்டும் தமிழர்கள் அதில் ஏன் ஆர்வம் காட்ட வேண்டும். கேள்வி: போர்க்குற்றங்களைப் புரிந்தவர்களைத் தண்டிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? பதில்: அங்கு போரே நடக்கவில்லை. இந்திய அரசாங்கத்துக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே போரா நடக்கிறது? இந்திய அரசாங்கத்துக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் இடையே நடப்பது போரா? அங்கு போர் இல்லை, அங்கிருப்பது பயங்கரவாதம், அங்கு நடப்பது உள்நாட்டு கிளர்ச்சி, அரசாங்கம் அதை உறுதியான கரத்தைக் கொண்டு அடக்குகிறது, தேவைப்பட்டால் இராணுவத்தை பயன்படுத்துகிறது. பிந்தரன்வாலா சுட்டுக் கொல்லப்பட்டபோது பொற்கோவிலில் போரா இடம்பெற்றது? இராணுவம் அங்கிருந்தபடியால் அதை ஒரு யுத்தம் என நீங்கள் அழைப்பீர்களா? கேள்வி: ஆனால் ஸ்ரீலங்காவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்தப் போரின்போது அல்லது அதை நீங்கள் எப்படி அழைக்க விரும்புகிறீர்களோ அதன்போது கொல்லப் பட்டிருக்கிறார்களே? பதில்: ஏனெனில் தமிழீழ விடுதலைப் புலிகள்(எல்.ரீ.ரீ.ஈ) பொதுமக்களை கேடயங்களாகப் பயன்படுத்தினார்கள். இப்போது அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. அவர்கள் பொதுமக்களை பயன்படுத்த முடியும், அவர்கள் சிறுவர்களை மனிதக் கேடயங்களாகவும் மற்றும் தற்கொலைக் குண்டுதாரிகளாகவும் பயன்படுத்த முடியும். கேள்வி: தமிழ் தேசியவாதம் அளவுக்கு மீறிப் போகிறது என நீங்கள் எண்ணுகிறீர்களா? பதில்: அதில் சந்தேகமே இல்லை. பல வருடங்களாக அப்படி நடைபெற்று வருகிறது. கிளர்ச்சியாளர்கள் எந்த விதி முறைகளையும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் அரசாங்கம் மட்டும் எப்போதும் யுத்தங்களுக்கான சர்வதேச சட்டம் அல்லது விதிகளைப் பின்பற்ற வேண்டியிருக்கிறது. இது எப்படி சாத்தியமாகும்? அப்படியானால் எந்த அரசாங்கத்தாலும் பயங்கரவாதத்தை அடக்க முடியாது. அது அப்படி என்றால் நாங்கள் அரசாங்கத்தை பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றா கேட்கிறோம். கேள்வி: நாங்கள் இதை பின்னோக்கிப் பார்த்தால். இந்தப் பயங்கரவாதம், ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக பாகுபாடுகாட்டியதால்தானே உருவானது? பதில்: நீங்கள் சொல்வதை நான் முற்றாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அந்த ஒன்று மட்டும் எல்.ரீ.ரீ.ஈ செய்ததை எல்லாம் நியாயப் படுத்திவிட முடியாது. ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்தததைக் காட்டிலும் மிக மோசமானதை அவர்கள் செய்தார்கள். அமிர்தலிங்கம் தொடங்கி அதன் பின்னான முழுத் தமிழ் தலைவர்களையுமே அவர்கள் துடைத்தழித்தார்கள். ஸ்ரீலங்கா அரசாங்கம் அப்படிச் செய்யவில்லை. எல்.ரீ.ரீ.ஈ முஸ்லிம்களை அவர்களின் மசூதியில் வைத்தே கொலை செய்து அவர்களை முற்றாக ஒழித்துக்கட்டினார்கள். அவர்கள் ஏனைய தமிழ் போராளிக் குழுக்களையும் கூட அழித்தொழித்தார்கள் .ஒரு கட்டத்தில், சிங்களவர்களும் நாங்களும்( ஸ்ரீலங்காத் தமிழர்களும்) சகோதரர்கள், இந்தியா ஒரு அந்நிய நாடு எங்கள் விவகாரங்களில் தலையிட அவர்களுக்கு உரிமையில்லை, என்று கூடச் சொன்னார்கள். எல்.ரீ.ரீ.ஈ அந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஆனால் இங்கேயுள்ள எங்களுக்கோ அதன் பிறகுகூட வெட்க உணர்வு தோன்றவில்லை. கேள்வி: எனவே எல்.ரீ.ரீ.ஈ இந்திய எதிர்ப்பு உணர்வு கொண்டதா? பதில்: நிச்சயமாக அவர்கள் இந்திய எதிர்ப்பாளர்களே,மற்றும் அதனால்தான் அவர்கள் இந்திய அமைதி காக்கும் படையினருக்கு (ஐ.பி.கே.எப்) அங்கு களங்கம் ஏற்படுத்தி அந்த நடவடிக்கை முழுதான தோல்வி அடையும்படி செய்தார்கள். நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், ஸ்ரீலங்காவிலுள்ள அனைத்து தமிழர்களுமே ஒற்றுமையாக இருக்கிறார்களா? கொழும்பில் உள்ள தமிழர்களும் வடக்கில் உள்ள தமிழர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்களா? கிழக்கில் உள்ள தமிழர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்களும் ஒற்றுமையாக உள்ளார்களா? தமிழ் புலம் பெயர் சமூகம் கூட ஒற்றுமையின்றித்தான் உள்ளது. உண்மையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழர்களிடம் நீதியற்ற முறையில்தான் நடந்து கொள்கிறது, அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன, அவர்கள் அங்கு சமத்துவமான பிரஜைகளாக நடத்தப்படவில்லை. இது ஸ்ரீலங்காவால் தீர்க்கப்பட வேண்டியது, போர்க்குணம் அதற்கான தீர்வு அல்ல ஒருவேளை அமெரிக்காவோ அல்லது வேறு எந்த நாடோ, நாளை காஷ்மீர் விடயத்திலும் இதேபோன்ற ஒரு பிரேரணைக்கு அனுசரணை வழங்குகிறது என வைத்துக்கொண்டால், நாங்கள் அதை மதிக்கப் போகிறோமா? இதைச் செய்ய அமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது என்றுதான் சொல்லப்போகிறோம். எல்.ரீ.ரீ.ஈ இரக்கமற்ற, மிகவும் கொடூரமான, ஒரு சக்தி மிக்க, பயங்கரவாத அமைப்பு. அவர்கள் ராக்கெட் ஏவுகணைகளைத் தவிர நீர்மூழ்கி கப்பல்கள், யுத்த விமானங்கள், என்பனவற்றையும் தம்வசம் வைத்திருந்தார்கள். எல்.ரீ.ரீ.ஈ ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்றது, மற்றும் அவர்களை துரோகிகள் என்று குற்றம் சுமத்தி அவர்களைக் கழுவியேற்றியது. அதுமட்டுமல்லாது தங்களைத் தவிர தமிழர்களுக்கு வேறு பிரதிநிதிகள் இருக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் முழு தமிழ் தலைவர்களையுமே கொன்றொழித்தனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire