samedi 10 mars 2012

யாழ்ப்பாண வரலாற்றில் முதல் முறையாக முச்சக்கரவண்டி ஓட்டும் பெண்கள்

யாழ்ப்பாணத்தில் முதல் தடைவையாக 10 பெண்கள் முச்சக்கர வண்டி சேவையில் ஈடுபடவுள்ளனர். பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட இந்தப் பெண்களுக்கும் மகளீர் தினமான நேற்றையதினம் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தால் மானிய அடிப்படையில் முச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு பெண்கள் யாழ் மாவட்ட மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் உதயனி நவரத்தினம் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து தலைமை உரை வழங்கிய யாழ்மாவட்ட மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் உதயனி நவரட்னம் நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக கணவன்மாரை இழந்த பெண்கள், பெற்றோரை இழந்த பெண்கள், வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட பெண்கள் என கிராம சேவை உத்தியோகத்தர்களின் உதவியுடன் இந்தப் 10 பெண்களும் தெரிவுசெய்யப்பட்டதாகக் கூறினார். இவர்களில் 04 பேர் நல்லூர் பிரதேச செயலகப் பிரிவிலிருந்தும், 02 பேர் யாழ்ப்பாண செயலகப் பிரிவிலிருந்தும், 03 பேர் உடுவில் பிரதேச செயலகப் பிரிவிலிருந்தும், ஒருவர் கோப்பாய் பிரதேச செயலக பிரிவிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும், இவர்களுக்கான சாரதிப் பயிற்சிகள் வழங்கப்பட்டு சாரதி அனுமதிப் பத்திரமும் பெறுக்கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பெண்களும் சாதிக்கமுடியும் என்ற ஊக்கத்ததையும், நம்பிக்கையையும் வழங்கும் முகமாகவே தமது நிறுவனம் செயற்பட்டு வருவதாக இங்கு உரையாற்றிய பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி செல்வி திருச்சந்திரன் தெரிவித்தார். 400,000 ரூபா பெறுமதியான இந்த முச்சக்கரவண்டி ஒன்றுக்கு வாரந்தம் 3,000 ரூபா வீதம் 24 மாதங்கள் 288,000 ரூபா வங்கிக் கடன் பணம் செலுத்தினால் மட்டும் போதும் என்றும் மீதி 112,000 ரூபா பணத்தை தமது பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire