jeudi 8 mars 2012

இலங்கை விவாகாரம் தொடர்பாக ஐ நா சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளது

பயங்கரவாத்த்துக்கு எதிரான நடவடிக்கைகளை ஒரு நாடு எடுக்கும் போது அது, மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனம், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச இணக்கப்பாடுகள், அகதிகள் மற்றும் மனிதநேய சட்டங்கள் மற்றும் இது சம்பந்தமான பிற சட்டங்களுக்கு உட்பட்டுதான் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இலங்கை அரசால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இலங்கையின் தேசிய நல்லிணக்கத்துக்கு உதவக் கூடும் என்று அந்தத் தீர்மானம் கூறுகிறது. தொடர்புடைய விடயங்கள்கொலை, போர், மனித உரிமைசட்டத்துக்குப் புறம்பான கொலைகள் நடைபெற்றது மற்றும் பலவந்தமாக கடத்தப்பட்டு காணமல் போவது போன்றவை தொடர்பில் நம்பகத் தன்மை வாய்ந்த விசாரணை வேண்டும் என்றும் வட பகுதியில் இருந்து படையினரை விலக்கிக் கொள்வதுடன் அதிகாரப் பகிர்வு அளித்து அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும் ஆணைக் குழு அளித்த பரிந்துரைகளை வரவேற்பதாகக் கூறும் அமெரிக்கா அதே நேரம் அக்குழு சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளது குறித்த விடயங்களை சரியாக ஆராயவில்லை என்று கவலைதெரிவித்துள்ளது. குறிப்பாக அத்தீர்மானம் மூன்று கருத்துக்களை வலியுறுத்துகிறது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும். இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் நீதி, சமத்துவம், பொறுப்புடைமை மற்றும் நல்லிணக்கம் கிடைப்பதை உறுதி செய்யக் கூடிய சட்டரீதியான மேலதிகல நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாவதாக ஆணைக்குழுவின் பரிந்துறைகளை நடைமுறைப்படுத்தவும், சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டது குறித்து ஆராயவும் இலங்கை அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் மற்றும் இனி எடுக்க உத்த்தேசித்துள்ள நடவடிக்கைகள் பற்றி இலங்கை அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது மேற்படி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகள், தொழில்நுட்ப உதவிகளை மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட விசேட தொடர்புடைய நடைமுறைகள் வழங்குவதையும் அவற்றை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதையும் இத் தீர்மானம் ஊக்குவிக்கிறது. அத்துடன் அத்தகைய உதவி வழங்கல் குறித்து ஐ நா மனித உரிமை பேரவையின் 22 ஆவது கூட்டத்தொடரில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தை அமெரிக்கத் தீர்மானம் கோரியுள்ளது. அதே நேரம் இலங்கை அரசுக்கு எதிரான விமர்சனங்கள் ஏதும் இதில் இடம்பெறவில்லை.

Aucun commentaire:

Enregistrer un commentaire