mardi 6 mars 2012

அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறிய செயலென்பதால் ஆயர் ராயப்பு ஜோசப் உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென ஜாதிக ஹெலஉறுமய அமைப்பு தெரிவித்துள்ளது.

வண. இராயப்பு ஜோசப் தலைமையிலான 31 மத குருமாரும் துரோகிகள் கடும் நடவடிக்கை வேண்டும்; ஜாதிக ஹெல உறுமய மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப், ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருப்பதானது, இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறிய செயலென்பதால் அவரை உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்திருப்பதானது இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறிய செயலென்பதால் அவரை உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென ஜாதிக ஹெலஉறுமய அமைப்பு தெரிவித்துள்ளது. ஆயர் ராயப்பு ஜோசப் கடந்த 30 வருடங்களாக புலிகளின் பிரிவினைவாதத்திற்கு ஆதரவாகவே குரல் கொடுத்து வந்துள்ளார். அவர் நாட்டின் ஐக்கியத்தை ஏற்றுக்கொள்ளாத அரசியல் நிலைப்பாட்டிற்கு குரல் கொடுத்து வருபவர். இதனால் புலிகளுக்கு ஆதரவான இவ்வாறான கோரிக்கைகளை விடுப்பது குறித்து ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கக் கூடாதென ஆயர்கள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் போது மன்னார் ஆயர் அதற்கு முரணாக கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் ஆயர்கள் சபையின் நிலைப்பாடு என்ன என்பதை பேராயர் மல்கம் ரஞ்சித் நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமெனவும் ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில் மன்னார் ஆயரின் கருத்து ஆயர்கள் சபையின் நிலைப்பாடல்ல என அந்த சபை அறிவித்துள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை வலியுறுத்தியுள்ள வண.இராயப்பு ஜோசப் தலைமையிலான 31 மதகுருமாரும் நாட்டின் இறைமைக்கு சவால் விடுத்திருப்பதாகவும் அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான உதய சம்மன் பில தெரிவித்துள்ளார். இந்தக் கோரிக்கையை விடுத்துள்ள குழுவினர் துரோகிகள் என்பதைத் தாங்களே நிரூபித்துவிட்டனர். உள்நாட்டில் எத்தகைய வேறுபாடுகள் இருந்தாலும் சர்வதேச சமூகத்தின் முன்னால் ஓரணியாக நிற்பதைப் பொருட்படுத்தாமல் துரோகிகளென நிரூபித்துள்ளனர். இனங்களுக்கு மத்தியில் பிரிவினைக்குக் காரணமறீணீச் செயற்படும் விடயம் இலங்கை அரசியல் அமைப்பை முழுமையாக மீறுவதாகும் என்று உதய கம்மன் பில கூறியுள்ளார். “ஆயர்மாரின் துரோகத்தனமான நடவடிக்கைக்கு எதிராக நாட்டின் இறைமையைப் பாதுகாக்க ஜனாதிபதி உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது

Aucun commentaire:

Enregistrer un commentaire