lundi 29 octobre 2012

இவ்வருடம் மேலும் 10,000 பசுக்கள் இறக்குமதி!


பால்மாவுக்குப்பதிலாக புதிய பால்நுகர்வை ஊக்குவிப்பதற்காக இவ்வருடம் மேலும் 10,000 பசுக்கள் இறக்குமதி செய்யப்படும். இதன்மூலம் பசுக்களின் எண்ணிக்கையை 10,000 இலிருந்து 20,000ஆக அதிகரிப்பதற்கு தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை தீர்மானித்துள்ளது.

ஏற்கெனவே அவுஸ்திரேலியாவிலிருந்து 500 பசுக்கள் இறக்குமதி செய்யப் பட்டுள்ளதாகவும் மேலும் 1500 பசுக்கள் இரு மாதங்களுக்குள் இறக்குமதி செய்யப்படும் எனவும் தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் தலைவர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

பால்மா இறக்குமதிக்காக இலங்கை வருடாந்தம் 4000 மில்லியன் டொலர்களை செலவிடுவதாகவும் பசுக்களை இறக்குமதி செய்வது நீண்டகால அடிப்படையில் செலவு குறைவானது என தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் இவ்வருடம் இறக்குமதி செய்யப்பட்ட பசுக்களின் மொத்தப் பெறுமதி நிர்ணயிக்கப்படவில்லை எனவும் அவை பல மில்லியன் பெறுமதியானவையாக இருக்கும் எனவும் அவர் தெரவித்தார். மலையகத்தில் பசுக்களின் பராமரிப்பு உணவு என்பனவற்றுக்காக மில்லியன் கணக்கன ரூபா செலவிடப்படவுள்ளது.

கர்ப்பம் தரித்த பசுக்களும் இறக்குமதி செய்யப்படும் எனவும் இதன்மூலம் பசுக்களின் எண்ணிக்கை மற்றும் பால் உற்பத்தி அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


Aucun commentaire:

Enregistrer un commentaire