samedi 27 octobre 2012

கார் முன்நோக்கி நகர்ந்ததில்,இந்தியர் ஒருவர் லண்டனில் பரிதாபமாக மரணமாகியுள்ளார்.

48 வயதான பற்றிக் பாண்டியா என்னும், இந்தியர் ஒருவர் லண்டனில் பரிதாபமாக மரணமாகியுள்ளார். பாண்டியாவின் 7 வயது மகன் காரில் இனிப்பு பண்டத்தை தேட முற்பட்டவேளை இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. லண்டன் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான ஐசில்வேத் பகுதியில் வசித்துவந்த பாண்டியா, தனது காரை ஸ்டாட் செய்துவிட்டு, இறங்கிச் சென்று கேராஜை மூட முற்பட்டுள்ளார். இதேவேளை காரில் இருந்த அவரது 7 வயதுச் சிறுவன், காரில் ஏதாவது இனிப்பு பண்டங்கள் இருக்கிறதா என்று தேடியுள்ளான். அப்போது அவன் அறியாமல் காந் பிரேக்கை அழுத்திவிட்டான். இதன் காரணமாக கார் முன்நோக்கி நகர்ந்துள்ளது.

கான் பிரேக், அமுக்கப்பட்ட நிலையில் கார் முன்நோக்கி நகர்ந்ததில், பாண்டியா கால்கள் தொடை மற்றும், இடுப்பு ஆகிய பகுதிகள் நசுங்கியுள்ளன. கார் முன் நகர்ந்து சுவருடன் சேர்த்து அவரை நசுக்கியுள்ளது. மனைவி ஓடிவந்து, காரை ரிவர்ஸ் கியர் போட்டு, பின் நோக்கி எடுத்துள்ளார். உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாண்டியாவின் இடுப்பில் உள்ள முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி 25/10/2012மாலை பாண்டியா பரிதாபமாக இறந்துவிட்டார்.

அம்மா அப்பாவை நான் தான் கொன்றுவிட்டேன், ஆனால் வேண்டும் என்று செய்யவில்லை தற்செயலாக நடந்துவிட்டது என்று அச் சிறுவன் திரும்பத் திரும்ப கூறி அழுது வருவதாகப் பொலிசார் கூறியுள்ளனர். இச் சிறுவனை சாந்தப்படுத்தவே முடியவில்லை என்று அவரது குடும்பத்தார்கள் மேலும் தெரிவித்துள்ளனர். விதி எப்படி எல்லாம் விளையாடுகிறது என்று பார்த்தீர்களா ? மரணத்தில் இருந்து தப்பிக்கவா முடியும் ? இருந்தாலும், சில விடையங்களில் நாம் கவனமாக இருந்தால், ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும். 

Aucun commentaire:

Enregistrer un commentaire