dimanche 21 octobre 2012

இராணுவ முகாமுக்கு முன்னால் சிவில் பாதுகாப்பு ஊழியர்களாக புலிகள்


கைவேலி காட்டுப் பகுதியிலுள்ள இராணுவ முகாமுக்கு முன்னால் சிவில் பாதுகாப்பு ஊழியர்களாக மாற்றப்பட்ட முன்னாள் போராளிகள் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. சிவில் பாதுகாப்பு அமைச்சினால் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் மூலம் நியமனம் பெற்ற 350 இளைஞர்இ யுவதிகளே இவ்வாறு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர் என் அதிர்வு இணையம் அறிகிறது. சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் மூலம் 'சிவில் பாதுகாப்பு ஊழியர்' என்ற பதவிக்கு வன்னிப் பகுதியில் புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு பெற்று வெளியேறிய முன்னாள் போராளிகள் உட்பட 350 பேர் இணைக்கப்பட்டனராம்.

இவர்களுக்கான வரவுப் பதிவுகளை அந்தப் பகுதியிலுள்ள இராணுவத்தினரே கவனித்து வருகின்றனர். கைவேலிஇ உடையார்கட்டுஇ வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு எனப் பல்வேறு பகுதியிலிருந்து 250 யுவதிகளும்இ 100 இளைஞர்களும் தெரிவுசெய்யப்பட்டு நியமனக் கடிதங்களும் வழங்கப்பட்டன. இவர்களுக்கான பணிகள் எவையெனக் குறித்தொதுக்கப்படாது நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இவர்கள் அனைவரும் கைவேலி காட்டுப்பகுதியிலுள்ள இராணுவ முகாமுக்கு முன்னால் தற்பொழுது விடப்பட்டுள்ளனர்.

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்று தங்களை நியமித்து விட்டு, இராணுவ முகாமுக்கு காவலுக்கு விட்டுள்ளார்களே என இந்த முன்நாள் போராளிகள் கவலை வெளியிட்டுள்ளனர். போரில் ஈடுபட்ட போராளிகளை இராணுவம் தற்போது தமது காவலுக்கு நிறுத்தியுள்ளது. என்ன கொடுமையடா ?

Aucun commentaire:

Enregistrer un commentaire