lundi 29 octobre 2012

இந்த நாட்டில் பிறந்த அனைவரும் இலங்கையர்களே இதனை எவராலும் மாற்ற முடியாது

news
எமது நாட்டில் உள்ள பெரும்பான்மை இன மக்கள் இந்த நாட்டை அனைவரினதும் நாடாக மாற்றியமைக்கும் செயற்பாடுகளுக்கு முக்கிய பங்களிப்பினை வழங்க வேண்டும் என மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
 
அண்மையில் மஹாத்மா காந்தி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
 
அனைத்து நாடுகளும் பெருமிதம் கொள்ளக் கூடிய வகையில் இலங்கையை மாற்றியமைக்க வேண்டும். அதற்கு இந்த நாட்டில் உள்ள அனைவரது பங்களிப்பும் அவசியமானது.
 
குறிப்பாக பெரும்பான்மை மக்கள் இந்த நாட்டை அனைவரினதும் நாடாக மாற்றியமைக்கும் செயற்பாடுகளுக்கு முக்கிய பங்களிப்பினை வழங்க வேண்டும்.
 
அதன்படி நாட்டில் உள்ள அனைத்து சமூக மக்களும் இந்த நாட்டை தாய் நாடு என பெருமிதத்துடன் கூறிக் கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது.
 
இந்த நாட்டில் பிறந்த அனைவரும் இலங்கையர்களே இதனை எவராலும் மாற்ற முடியாது. ஒரே நாட்டில் பல்வேறு இன சமூகங்கள் தங்களது மரபுரிமைகளுடன் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள முடியாது என்றில்லை அனைவரும் ஒன்று பட்டு அதனை உருவாக்குவோம். 
 
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது. எனவே கடந்த கால பிரச்சினைகள் தொடர்பிலான தெளிவான புரிந்துணர்வு, நல்லிணக்கத்தை துரித கதியில் ஏற்படுத்த வழிகோலும்.
 
அத்துடன் யுத்த காலத்தில் காணாமல் போன ஒரு இலட்சத்து 40ஆயிரம் பேருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார்

Aucun commentaire:

Enregistrer un commentaire