vendredi 19 octobre 2012

32 நாள்களாக மண்டபத்தில் உள்ள இருட்டறை முகாமில் அடைக்கப்பட்ட 65 ஈழத்தமிழர்கள்

19 ஒக்ரோபர் 2012
32 நாள்களாக    மண்டபத்தில் உள்ள இருட்டறை முகாமில் அடைக்கப்பட்ட 65 ஈழத்தமிழர்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர். முள்வேலி முகாமைவிட இது மோசமாக இருப்பதாக அவர்கள் கூறினர்.
அவுஸ்ரேலியா செல்லமுயன்ற போது படகு இயந்திரம் பழுதடைந்ததால், நடுக்கடலில் தத்தளித்த 3 பெண்கள், 1 ஆண் குழந்தை உள்ளிட்ட 65 பேரை தமிழக மீனவர்கள் காப்பாற்றி நாகபட்டினம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர், அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள சிறப்பு முகாமில் (வெளியேற முடியாத அறை) அடைக்கப்பட்டு, க்யூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, 32 நாள்களாக இருட்டறையில் அடைத்து க்யூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்துவதால், அவர்களின் தினசரி தேவைக்களுக்கு மிகவும் அவதிப்பட்டனர்.
மோசமான அறையில் தொடர்ந்து 32 நாள்களாக அடைத்து வைத்ததைக் கண்டித்தும், எங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பி விடுங்கள் என்று கோரியும் வியாழக்கிழமை காலை முதல் சிறப்பு முகாமுக்குள் உண்ணாவிரதம் இருந்தனர்.இதனையடுத்து, முகாம் தனித் துணை ஆட்சியர் துரை தலைமையில் அதிகாரிகள் சமரசப் பேச்சு நடத்தினர்.
முடிவில், ஈழத்தமிழர்களின் கோரிக்கையை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக துணை ஆட்சியர் தெரிவித்தார். இதன் பின்னர் தமிழர்கள் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர்

Aucun commentaire:

Enregistrer un commentaire