samedi 27 février 2016

புதிதாக 27 பில்லியனர்கள்

இந்திய பில்லியனர்கள் பட்டியலில் புதிதாக 27 பேர் இணைந்துள்ளதாக ஹூரன் குளோபல் ரிச் லிஸ்ட் 2016 அறிக்கை தெரிவித்துள்ளது. இந்திய சந்தையில் 26 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ள நிலையில், இவருடன் போட்டி போட இந்தியாவில் 2016ஆம் ஆண்டுக்காலத்தில் புதிதாக 27 பேர் பல்லியனர்கள் உருவாகியுள்ளதாக ஹூரன் பத்திரிக்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.
308 பில்லியன் டாலர் இந்திய பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு, 2016ஆம் நிதியாண்டில் 308 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. அதிலும் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்திய பில்லியனர்களின் சொத்து மதிப்பு 25 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்தியாவில் மட்டும் சுமார் 111 பில்லியனர்கள் உள்ளனர் என்று ஹூரன் பத்திரிக்கை செய்ய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் மும்பையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Aucun commentaire:

Enregistrer un commentaire