lundi 1 février 2016

அபாயகரமான கருத்தரிப்பு மருந்து மோடியின் நண்பர் ராம் தேவ்வின் தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துக் கம்பெனி

நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் ராம் தேவ்வின் ஆயுர் வேத மருந்துக் கம்பெனியின் தயாரிப்பான கருத்தரிப்பு மருந்து அபாயகரமானது என்று அதனை விசாரிக்க உத்தரகாண்ட் அரசினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு தெரிவித்துள்ளது ராம்தேவ், மோடி அரசிடம் ஏற்படுத்திக்கொண்ட தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பதஞ்சலி என்ற பெயரில் ஆயுர்வேத மருந்துக் கம்பெனிகள், நூடுல்ஸ் போன்ற துரித உணவுகள் தயாரிக்கும் கம்பெனிகள் மற்றும் சர்வதேச யோகா பயிற்சி மையங்கள் போன்றவற்றை நடத்தி வருகிறார்.
 
குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் கருத்தரிக்க உதவிடும் என்று பரவலாக விளம்பரம் செய்து ‘புத்ரஜீவக்’ என்ற மருந்தை தயாரித்து நாடு முழுவதும் சந்தைகளில் வியாபாரம் செய்து வருகிறார்.
 
இந்த மருந்து அபாயகரமானது என்று சர்ச்சை எழுந்ததால் அதைத் தடை செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு மே 1ம் தேதியன்று மாநிலங்களவை எம்பிக்கள் ஐக்கிய ஜனதா தள எம்பி கே.சி.தியாகி தலைமையில் இந்த மருந்தை தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
 
இதனைத் தொடர்ந்து மத்திய அரசு உத்தரகாண்ட் அரசை இது குறித்து விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டது. உத்தரகாண்ட் `ஆயுஷ்’ மருந்து கட்டுப்பாட்டாளரும், பாஜக ஆதரவாளருமான பி.டி. சாமோலி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அது ராம்தேவ் கம்பெனியின் மருந்தில் ஆபத்து ஒன்றுமில்லை என்று கூறியது.
 
ஆனால் சாமோலி அறிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியதால் உத்தரகாண்ட் அரசு சுகாதாரத்துறை தலைமை அதிகாரி மற்றும் சட்டத்துறை தலைமையில் மீண்டும் ஒரு விசாரணை குழு அமைத்து மருந்தின் தன்மையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.
 
தற்போது இந்த குழுவின் அறிக்கை ராம்தேவ்வின் மருந்து அபாயகரமானது என்றும் அது தடைசெய்யப்பட வேண்டும் என்றும், மருந்து தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire