mardi 23 février 2016

வழக்கில் முதல் குற்றவாளி ஜெயலலிதா! 668 பேர் கையில் பச்சை ரூ.300 சேலை, வேட்டி, பனியன், காலை டிபன், மதியம் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

அமைச்சர்கள் அனைவரும் ஒதுங்கிக் கொள்ள,பன்னீர்செல்வம், நந்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், பழனிச்சாமி, வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர், நிகழ்ச்சியை துவக்கி வைப்பதாக இருந்தது. ஆனால் மதியம், 2:00 மணிக்கு கோகுல இந்திரா தவிர, மற்ற அமைச்சர்கள் அனைவரும் அங்குவந்தனர். பின், நிகழ்ச்சி துவங்கியது. அமைச்சர் வளர்மதியை, பச்சை குத்திக் கொள்ள தொண்டர்கள் அழைத்தனர். 'நான் ஏற்கனவே குத்தியிருக்கிறேன்' என சொல்லி, அவர் கையை காட்ட, அவரை விட்டுவிட்டனர். உடனே, அமைச்சர் பழனியப்பனும், தன் கையை காண்பித்து ஒதுங்கினார். 
இப்படி அமைச்சர்கள் அனைவரும் ஒதுங்கிக் கொள்ள, தொண்டர்களுக்கு முதல்வர் உருவம் பச்சைகுத்தப்பட்டது. ஏற்பாடு செய்யப்பட்ட, 668 பேர் வரிசையாக பச்சை குத்திக் கொண்டனர். ஒருவருக்கு ரூ.300* வேலுார் மாவட்டம், அகரம்சேரி பகுதியைச் சேர்ந்த, 38 நரிக்குறவர்கள், பச்சை குத்தும் பணிக்காக வந்திருந்தனர். ஒரு பச்சை குத்த, 300ரூபாய் வீதம் கொடுக்கப்பட்டது  பச்சை குத்தும்போது, உடலில் ஒவ்வாமை ஏற்பட்டால், சிகிச்சை அளிக்க, மருத்துவக் குழு தயார் நிலையில் இருந்தது  பச்சை குத்திக் கொண்டவர்களுக்கு, சேலை, வேட்டி, பனியன், காலை டிபன், மதியம் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.  கூட்டுசதியால் சொத்து  குவிப்புகர்நாடக அரசு பரபரப்பு வாதம்

புதுடெல்லி: முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேர், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி வாதம் நேற்று உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. அப்போது அவர்கள் கூட்டுச்சதி மூலம் சொத்து குவித்தது உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளன என்று கர்நாடக அரசு தரப்பில் மூத்த வக்கீல் வாதிட்டார்.

வருமானத்திற்கு அதிகமாக ரூ.65 கோடி சொத்து சேர்த்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன், உறவினர் இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா கடந்த ஆண்டு தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக அரசு மற்றும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

வக்கீல்கள் ஆஜர்: இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமித்தவாராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் அனைத்து தரப்பினரும் தங்களின் வாதங்களின் விவரங்கள் குறித்து நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.  இந்நிலையில், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. கர்நாடக அரசு சார்பில் மூத்த வக்கீல்கள் ஆச்சார்யா, துஷ்யந்த் தவே, வக்கீல் அரிஸ்டாட்டில் ஆகியோரும், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் சார்பில் மூத்த வக்கீல்கள் நாகேஸ்வரராவ், சேகர் நாபே, குமார், மணி சங்கர், செந்தில், அசோக், வக்கீல்கள் பரணி குமார், தனஞ்செயன், கருப்பையா, பன்னீர் செல்வம், அம்பிகைதாஸ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் ஆஜராகினர். 

குமாரசாமி கணக்கு தப்பு: கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே வாதிட்டதாவது: கடந்த 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்த காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடியே 44 லட்சத்து 73 ஆயிரத்து 573 சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதில் ரூ.28 கோடி கட்டிடம் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, இந்த தொகையை ரூ.5 கோடியாக குறைத்துள்ளார். மொத்த வருமானமாக ரூ. 10 கோடியே 67 லட்சத்து 31 ஆயிரத்து 224 வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த தொகையை ரூ.24 கோடியே 17 லட்சமாக நீதிபதி குமாரசாமி அதிகரித்து கணக்கிட்டுள்ளார்.

 இவருடைய கணக்கின்படி பார்த்தாலே மொத்த சொத்து மதிப்பு 76.75 சதவீதம் அதிகமாக வருகிறது. ஆனால், அதை வெறும் 10 சதவீதத்திற்கும் குறைவாக தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.  கூட்டு சதி: இந்த கணக்கீடுகளை உயர் நீதிமன்ற நீதிபதி கணக்கிலேயே கொள்ளவில்லை. இதை கவனத்திலேயே கொள்ளாமல், 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.  கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 936, 937 ஆகிய பக்கங்களில் உள்ள கர்நாடக தரப்பு மற்றும் மற்றொரு மனுதாரரான திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பு வாதத்தையும் முற்றிலும் புறக்கணித்துள்ளது தெளிவாக தெரிகிறது. 

வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா மற்றும் மற்ற 3 பேருக்கும் கூட்டுச்சதியில் தொடர்பில்லை என்றும் கூட்டுச்சதியில் ஈடுபடவில்லை என்றும் கூறுவது முற்றிலும் தவறானது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஜெயலலிதாவிற்கு எந்த வகையிலும் ரத்த சொந்தம் இல்லை. முதல்வர் பாதுகாப்பில்: ஜெயா பப்ளிக்கேஷன் என்ற நிறுவனத்தின் பெயரில் நாளிதழ் வெளியிடுகிறது. ஒரு ரூபாய்க்கும் குறைவாக ஒரு நாளிதழை விற்பனை செய்து, அதன் மூலமாகவும், சந்தா மூலமாகவும் பல கோடிகள் சம்பாதிக்கப்பட்டது என்று கணக்கு காட்டப்பட்டுள்ளது. 
இது முற்றிலும் முரணாகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது. ஒரே வீட்டில் இருந்து கொண்டு முதல்வர் பாதுகாப்பில் இவை அனைத்தும் நடைபெற்றுள்ளது. இவை அனைத்தையும் உயர் நீதிமன்ற நீதிபதி கணக்கில் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. விசாரணை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு சம்பந்தம் இல்லாமல் 5 பக்கத்திற்கு தீர்ப்பு அளித்துவிட்டு அவர்களை விடுதலை செய்துள்ளதை ஏற்க முடியாது. 

முறைகேடான வசூல்: ஜெயா பப்ளிக்கேஷன் மற்றும் சசி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களில் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் முக்கிய பங்குதாரர்களாக இருந்துள்ளனர். இவர்களே இந்த நிறுவனங்களை இயக்கியுள்ளனர்.  குற்றம்சாட்டப்பட்டுள்ள தொகையில் ரூ.27 கோடியே 79 லட்சத்து 88 ஆயிரத்தை 945 கட்டிடம் கட்டுவதற்கு செலவழிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. இது சாட்சியங்கள் மூலமாக நிரூபிக்கபட்டுள்ளது. சுமார் 28 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக நீதிபதி குறைத்துள்ளார். இந்த கணக்கீட்டில் பெரிய பிழை உள்ளது. 

 கடன் தொகை வருமானமா: கடனாக வாங்கிய பணத்தையும் வருமானமாக சேர்த்து உயர் நீதிமன்ற நீதிபதி கணக்கிட்டுள்ளார். கடனாக வாங்கும் தொகை எவ்வாறு வருமானமாகும். மொத்த வருமானமான ரூ.10 கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 224, நீதிபதியால் ரூ.24 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனால், சுமார் 13 கோடி ரூபாய் வருமானத்தை அதிகரித்து காட்டியுள்ளார். இந்த பணம் எங்கிருந்து வந்தது என்பதை தெளிவாக குறிப்பிடப்படவில்லை. மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியதாக ஜெயலலிதா ஒப்புக் கொண்ட நிலையில், பல கோடி ரூபாய் சொத்து சேர்த்தது எப்படி என்று நிரூபிக்கப்படவில்லை. சொத்துக்களை கணக்கிட்டதில் கணிதப்பிழை உள்ளது. இதனாலேயே குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். உயர் நீதிமன்ற நீதிபதியின் கணக்கீட்டின்படி எடுத்துக் கொண்டாலும், மொத்த சொத்து மதிப்பு 76 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிகிறது. இது எவ்வாறு 10 சதவீதத்திற்கும் குறைவாக கணக்கிடப்பட்டது என்பது தெரியவில்லை.

வழக்கில் குறிப்பிட்டுள்ள கால கட்டத்தில் புதிதாக 21 கட்டிடங்கள் கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கில் மொத்தம் 149 கட்டிடங்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக கட்டப்பட்ட 21 கட்டிடங்களில், கான்பரன்ஸ் ஹால், நீச்சல்குளம், 2 தியேட்டர்கள் என மிக ஆடம்பரமாக கட்டப்பட்டுள்ளது. 2 டிரான்ஸ்பார்மர்கள், 36 ஏசிக்கள் ஆகியவை ஒரே கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.   மொத்தமாக 1 லட்சத்து 66 ஆயிரத்து 839 சதுர அடி அளவுள்ள கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளதாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களில், பெரிய கான்பரன்ஸ் ஹால், டைனிங் ஹால், தியேட்டர்கள், நீச்சல் குளம், வரவேற்பறை, தங்கும் அறை, பொருட்கள் வைக்கும் அறை, வேலையாட்கள் தங்குவதற்கு அறை, பூஜை அறை, லிப்ட், ஒவ்வொரு அறைக்கும் தனித்தனி படிக்கட்டுகள் என அனைத்தும் கிரானைட் மற்றும் விலை உயர்ந்த மார்பிள் கல் கொண்டும் கட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது என்று சொல்வதை எவ்வாறு நம்ப முடியும். 

 மாடர்ன் மகாராஜா: ஐதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டத்தில் அனைத்து வசதியுடன் கூடிய கட்டிடம் ரூ.6 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதை சாட்சிகள் விசாரணை நீதிமன்றத்தில் கூறியுள்ளனர். பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பங்களாக்களில், மாடர்ன் மகாராஜா போல இவர்கள் வாழ்ந்துள்ளனர். 
பூஜை அறை: குறுக்கிட்ட நீதிபதிகள், பங்களாக்களில் பூஜை அறையும் இருந்ததா? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து துஷ்யந்த் தவே கூறுகையில், கடந்த 1970 காலகட்டத்தில், மும்பையில் வசித்த முக்கிய கடத்தல் கும்பல் தலைவர்கள் வருடத்திற்கு ஒரு முறை திருப்பதிக்கு சென்று, சம்பாதித்த பணத்தில் 25 சதவீதம், 50 சதவீதம் காணிக்கையாக கொடுத்து கடவுளை  தொழில் பங்குதாரராக ஆக்குவார்கள். சம்பாதித்த பணத்தை காப்பாற்ற கடவுளை துணைக்கு அழைப்பார்கள். அதுபோல தான் இங்கும். 

இந்த வழக்கு தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகாவிற்கு மாற்றப்பட்ட போது அனைத்து சாட்சிகளும், மீண்டும் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர், அந்த விசாரணையில் வழக்கிற்கு தேவையான அனைத்து ஆதாரங்களும் வழங்கப்பட்டது.  இவ்வாறு அவர் வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி கூறும்போது, வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சாட்சிகளின் பட்டியலை கொடுக்க வேண்டும் என்று கூறினர். வழக்கின் விசாரணை இன்றும் தொடர்ந்து நடைபெறும்.

போலி வங்கி கணக்குகள்
போலியாக தொடங்கப்பட்ட வங்கிக்கணக்குகள்  மூலம் பல கோடி ரூபாய் முறைகேடாக பரிவர்த்தனை செய்துள்ளனர். இதற்காக போலியாக  50 வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு  நிறுவனத்தின பெயரிலும் ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.18  லட்சம் என பல லட்சம் ரூபாய் தினமும் வங்கிக்கணக்குகளில் பரிவர்த்தனை  செய்யப்பட்டுள்ளது.

ஊழல், புற்றுநோய் போன்றது
ஊழல் என்பது நாட்டிற்கு புற்றுநோய்  வந்தது போல என பல தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே இந்த  வழக்கிலும், ஊழல் தொகையின் அளவை பார்க்காமல், அதனை சட்டப்படி அணுக  வேண்டும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire